கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி நிகழ்வுகள்.....
10.03.2022 ஆகிய இன்று கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் பல்வேறு சமுர்த்தி வேலைத்திட்டங்கள் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் S.H.முசாமில் அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமுதாய அடிப்படை அமைப்பிற்கான (CBO) அலுவலக பைகள் வழங்கப்பட்டதுடன், சமுதாய அடிப்படை அமைப்புக்களின் (CBO) அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன் சௌபாக்கியா வீடுகளையும் உரிய சமுர்த்தி பயனாளியிடமும் கையளித்து வைத்தார்.
சமுர்த்தி வங்கியின் புதிய மாற்றங்களுக்கு அமைவாக தற்போதைய காலத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் (CBO) பலம் பொருந்திய ஒரு அமைப்பாக செயற்படுகின்றன. இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்கள் (CBO) ஒரு கிராம சமுர்த்தி வங்கியாகவும் தற்போது செயற்படுகின்றன, அந்த அளவிற்கு இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு (CBO) பல அதிகாரங்களை சமுர்த்தி திணைக்களம் வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் கிராம மக்களின் உடனடி தேவைகளுக்காக பணத்தினை கிராமத்திலேயே இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்கள் (CBO) வழங்குகின்றன. இது அநியாய வட்டிக்காரர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஒரு பாரிய திட்டமாகும். எனவே இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்களை (CBO) பலப்படுத்த கிராமங்கள் தோறும் அலுவலகங்கள் திறக்கப்பட்டும், அலுவலக பைகளும் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றது.
இதன் ஒரு அங்கமாகவே கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் சமுதாய அடிப்படை அமைப்புக்களை (CBO) ஊக்குவிக்கும் செயற்பாடு 10.03.2022 நடைபெற்றது. இந்நிகழ்வில் கோரளைப்பற்று மத்தி உதவிப்பிரதேச செயலாளர் M.A.C.றசீதா அவர்களும்,மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு (CBO) பொறுப்பான முகாமையாளர் K..பகீரதன் அவர்களும் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளரும் தலைமையக முகாமையாளருமான S.A.M.பஸீர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment