சௌபாக்கியா வார வேலைத்திட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில்......
சௌபாக்கியா வார வேலைத்திட்டம் தற்போது நாடு பூராகவும் 24.03.2022 தொடக்கம் நடைபெற்று வருகின்றது. 25.03.2022அன்று மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிலும் நடைபெற்றது. இதன் போது சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனுகரிகளுக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டடு காசோலை வழங்கப்பட்டோர் விபரம் 2021 கார்த்திகை மாதத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பெரியகல்லாறு - 03, தெற்கு கிராமத்தை சேர்ந்த வசுமதி கேசகபிள்ளை அவர்களுக்கும், பெரியகல்லாறு - 03 கிராமத்தை சேர்ந்த 2021 மார்கழி மாதத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஜெயராணி புஸ்பராசா அவர்களுக்கும், 2022 தை மாதத்திற்கு தெரிவு செய்யப்பட்ட களுதாவளை - 02 கிராமத்தை சேர்ந்த கதிரவேலு சிறிகாந்தன் அவர்களுக்கும் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் K.உதயகுமார் அவர்களும், கருத்திட்ட முகாமையாளர் S.தமிழ்வாணி அவர்களும், சமூக அபிவிருத்தி உதவியாளர் T.உதயசுதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment