சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு மண்முனை வடக்கில் சௌபாக்கியா வீடு கையளிப்பு....
2022ம் ஆண்டிற்கான சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு 24.03.2022 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் இருதயபுரம் சமுர்த்தி வலத்திற்குட்பட்ட கொக்குவில் கிராமத்தில் திருமதி.மங்களராணி எனும் சமுர்த்தி பயனாளிக்கு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சத்துருக்கொண்டான் கிராமத்தின் யமுனை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அலுவலகமும் திறந்த வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் K.பரமலிங்கம் அவர்களும், கருத்திட்ட முகாமையாளர் வசந்தா உதயகுமார் அவர்களும். சமுர்த்தி முகாமையாளர் M.சுல்பி அவர்களும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் K.அருனாகரன் அவர்களும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment