மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.......
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் 19.02.2022 (சனிக்கிழமை) அன்று மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் 14 பிரதேச செயலகத்தில் இருந்தும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் 'பசுமையானதொரு தேசம்' தேசிய விவசாய வீட்டுத் தோட்ட பயிர்செய்கை வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு நாற்றுக்கள் 29.03.2022ஆம் திகதியன்று வழங்குவதற்கான முன் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மற்றும் வங்கிகளில் வழங்கப்படும் சமுர்த்தி நிவாரணம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. சௌபாக்கியா வாரம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் சமுர்த்தி வாழ்வாதார உதவிகளையும், சௌபாக்கியா வீட்டு திட்டங்களுக்கான ஆரம்ப பணிகளை தொடங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. மற்றும் சமுர்த்தி வங்கி நடவடிக்கை பற்றி ஆராயப்பட்டதுடன் அதற்கான பல திட்டங்களும் முன்னெடுக்கப்ட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும் மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.Fமனோகிதராஜ் அவர்களும் மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment