மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வார வேலைத்திட்டம் ......

  மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வார வேலைத்திட்டம் ......



சௌபாக்கியா வார வேலைத்திட்டம் தற்போது  நாடு பூராகவும் 24.03.2022 தொடக்கம் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில்  மண்முனை  பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமச்சிவாயம்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  மட்டக்களப்பு  மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள்  கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளியிடம் வீட்டினை கையளித்ததுடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில்  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் சித்தி பாத்து அவர்களும் சமுர்த்தி முகாமையாளர் K.நவரஞ்சன் அவர்களும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்  அவர்களும்  கலந்து சிறப்பித்தனர்.








Comments