சமுர்த்தி வங்கிகளை பார்வையிட்டார் மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்....
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் சமுர்த்தி வங்கிகளை பார்வையிட்டு அதன் செயற்பாடுகள் பற்றி கேட்டறிந்து கொண்டு வருகின்றார். இதன் ஒரு கட்டமாக 10.03.2022 அன்று ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியை பார்வையிட்டார், இதன் போது ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கிச்சங்கத்தின் செயற்பாடுகளை பற்றி சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.செந்தூர்வாசன் அவர்களிடம் கேட்டறிந்த கொண்டார்.
இதன் பின் சமுர்த்தி வங்கி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடி அவர்களின் பணிகளை கேட்டறிந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகளையும் கலந்துரையாடினார்.
பின்னர் வாழைச்சேனை சமுர்த்தி வங்கியை பார்வையிட்டு அதன் பணிகள் பற்றி சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரதிதேவி சிறிதரன் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதன் போது வங்கி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் கலந்தரையாடி அவர்களின் பணிகளை பற்றி கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் K.பகீரதன் அவர்களும் வங்கி நடவடிக்கைகளை பார்வையிட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment