துணிச்சலான பெண்மணி தான் கல்லடி வேலூர் தவம் அக்கா......

 துணிச்சலான பெண்மணி தான் கல்லடி வேலூர்  தவம் அக்கா......

கல்லடி வேலூர் கிராமத்தில் சமுர்த்தி திட்டத்தில் 2010 தொடக்கம் சிறந்த சேவையை வழங்கிய மிகச்சிறந்த சமுர்த்தி பயனுகரியான கத்தரின் கார்மேல் குலசேகரம் அவர்கள் 03.03.2022ம் திகதி அன்று இறையடி சேர்ந்தார்.

மட்டக்களப்பு தாண்டவண்வெளியை பிறப்பிடமாக கொண்ட இவர் 1950.03.22ம் திகதி பிறந்தார். 1971 முதல் கல்லடி வேலூர் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் குலசேகரத்தை திருமணம் முடித்தன் பின் கல்லடி வேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு தான் இன்று இறக்கும் வரை வாழ்ந்துள்ளார். க.பொ.த(சா.த) வரை கல்வி கற்ற இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்' கணவர் மீன் பிடித் தொழிலை செய்து வந்தாலும் இறுதி காலம் வரை தன் சுயதொழிலான தையல் தொழிலை செய்து வாழ்ந்த ஒரு துணிச்சல் மிக்க பெண்மணி இவர் ஆவார். கல்லடி வேலூர் கிராமத்தில் சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது சமுர்த்தி நிவாரணத்தை மாத்திரம் பெற்று வந்த இவர் 2010 தொடக்கம் ஒரு உத்வேகமான தன்னம்பிக்கை கொண்ட பெண்மணியாக திகழ்ந்தார். குறுகிய காலத்தில் லட்சுமி சமுர்த்தி சங்கத்தின் தலைவராக செயற்பட்டு பல சமுர்த்தி சங்கத்திற்கு உதாரண தலைவியாக திகழ்ந்தார்.



கல்லடி சமுர்த்தி வங்கியின் வளர்ச்சிக்கு கல்லடி வேலூர் சமுர்த்தி கிராமத்தின் மூலம் பல வெற்றிகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு காரணியாகவும் திகழ்ந்துள்ளார். கடன் பெற்று வாழ்வதை விரும்பாத இவர் தன் சுயதொழிலுக்காக சமுர்த்தி வங்கியூடாக 30000 ரூபாய் கடன் பெற்று சீராக செலுத்திய ஒரு சமுர்த்தி பயனாளி ஆவார். இவரை கல்லடி வேலூர் தாய் சமுர்த்தி  ஒன்றியம் 2010ம் ஆண்டு மதிப்பிற்குரிய மகளிர் என கௌரவித்து வாழ்த்தி இருந்தது.

சமுர்த்தி உத்தியோகத்தராக நான் 2009 தொடக்கம் 2013 வரையான காலத்தில் நான் கல்லடிவேலூர் கிராமத்தில் கடமையாற்றிய போது மிகச்சிறப்பாக சேவையாற்றிய ஒரு தாய், என் நல்லது கெட்டது என பல விடயங்களில் என்னுடன் தோளோடு தோள் நின்று உழைத்த தாய், என் தாயை நான் இழந்து நின்ற போது என்னை கட்டியணைத்து ஆறுதல் சொன்ன தாய். இன்று என்னை விட்டு சென்று விட்டார். அவரின் ஆத்மா சாந்தியடைய நானும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

என்றும் அன்புடன்

ஜெயா.... 


















Comments