2022ஆம் ஆண்டிற்கான முதலாவது சௌபாக்கிய வாரம் 24.03.2022 கிரான் பிரதேச செயலகத்தில் ஆரம்பம்.........

 2022ஆம் ஆண்டிற்கான முதலாவது சௌபாக்கிய வாரம் 24.03.2022 கிரான் பிரதேச செயலகத்தில் ஆரம்பம்.........

சமுர்த்தி திணைக்களத்தினால் வருடாந்தோறும்  சௌபாக்கிய வாரம் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டிற்காக சௌபாக்கிய வார நிகழ்வு 24.03.2022 அன்று கிரான் பிரதேச செயலகத்தின் முறக்கொட்டான்சேனை மற்றும் புனானை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஆறு லட்சம் ரூபாய்கான சௌபாக்கிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்த கொண்டனர்.

24.03.2022  தொடக்கம் 31.03.2022 வரை நாடுபூராவும் 2022ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான சௌபாக்கிய வாரம் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமுர்த்தி திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் பிரதேச, கிராம மட்டத்தில் வாழ்வாதார உதவிகள், வீட்டுத்திட்டங்களை திறந்து வைத்தல், புதிய வீடுகளுக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கு கடன்கள் வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்களும் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Comments