அறிந்ததும் அறியாததும் பாகம் (22)........ சிறார்கள் பயிற்சியில் ஈடுபட வலைப்பயிற்சி மையம் கிரிக்கெட் உபகரணங்கள்.....
அறிந்ததும் அறியாததும் பாகம் (22)........
சிறார்கள் பயிற்சியில் ஈடுபட வலைப்பயிற்சி மையம் கிரிக்கெட் உபகரணங்கள்.....
மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSV மற்றும் KSC யின் பங்களிப்பு.....
EPP சிறார்களின் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொள்ள சிற்றிலக்கி விளையாட்டு கழகம் தம் மைதானத்தின் ஒரு பகுதியை வலைப்பயிற்சி மையம் அமைக்க அனுமதி அளித்து தந்திருந்தது. இதற்கமைய மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழத்தின் அங்கத்தவர்களின் நிதியின் உதவியுடன் மட்டக்களப்பில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக வலைப்பயிற்சி மையம் 21.12.2019ம் திகதி அன்று சிற்றிலக்கி விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரும் கழகத்தின்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமாகிய மல்கம் டிலிமா அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதன் போது மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழத்தின் புலம்பெயர்ந்து வாழும் அங்கத்தவர்களின் பிரதிநிதியான P.வசீகரன் அவர்கள் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும். மற்றும் இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தவைலர் E.சிவநாதன், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் செயலாளர் S.அருள்மொழி, கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பொருளாளர் K.தயாசிங்கம், EPPயின் திட்ட முகாமையாளர் V.வசந்தமோகன், சிற்றிலக்கி விளையாட்டு கழகத்தின் தலைவர் A.மகேந்திரராசா மற்றும் செயலாளர் S.முருகேசு அகியோர் கலந்து கொண்டனர்.
இவற்றை எல்லாம் ஏன் எழுதுகின்றேன் என்றால் எவ்வளவு தூரம் கோட்டைமுளை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க முயற்சி செய்துள்ளது என்பதை மற்றவர் அறிய வேண்டும் என்பதற்காக தான்.
இதன் அடுத்த கட்டமாக மற்றுமொரு கிரிக்கெட் உபகரண தொகுதி எமது புலம்பெயர் உள்ளங்களால் அனுப்பிவைக்கப்பட்டது. சுமார் பல லட்சம் ரூபாய் பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்களை மட்டக்களப்பில் உருவாக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வரும் EPP அமைப்பினரிடம் புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான P.வசீகரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் ஒரு விடயத்தை நான் முக்கியமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மட்டக்களப்பில் யாரும் பந்து வீசும் இயந்திரத்தை அந்த காலத்தில் உபயோகித்ததாக நான் அறியப்படவில்லை, ஆனால் முதல் தடவையாக பந்து வீச்சு இயந்திரம் EPP அமைப்பினருக்கு அனுப்பபட்டு சிறார்கள் பயிற்சியிலும் ஈடுபட்டனர். இவ் பந்து வீச்சு இயந்திரத்துடன், 50 கடின பந்து துடுப்பாட்ட மட்டைகள், நூற்றுக்கணக்கான கடின பந்துகள், புள்ளிக்கணிப்பு மட்டைகள், பாதணிகள், தலைகவசங்கள், கையுறைகள் என பல பொருட்களை EPPயின் சிறார்களிடம் கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் 50 வருட வரலாறு கொண்ட கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வரலாற்றுச்சான்றாகவே இந்நிகழ்வை காணக் கூடியதாக இருக்கின்றது ஏன் எனில் இக்கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் இவ்வுள்ளங்களே இம்இமாலைய கிரிக்கெட் உபகரணங்களை வழங்கியுள்ளார்.
அன்று நடந்த இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் P.சடாற்சரராஜா, பொருளாளர் K.தயாசிங்கம், செயலாளர் B.ஜெயதாசன், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் E.சிவநாதன், செயலாளர் S.அருள்மொழி, பொருளாளர் S.ரஞ்சன் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரான மல்கம் டிலிமா அவர்களும் EPPயின் திட்ட அணைப்பாளர் V.வசந்தமோகன், மற்றும் பயிற்றுவிப்பாளர்களான C.யசோக்குமார், T.மதிராஜ், நிமால் மோஸஸ், பாஸுல், K.கிருஸ்ணராஜாஜி, S.சுரேஸ்குமார் ஆகியோருடன் EPP அமைப்பின் சிறார்களின் பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.இது வெறும் சிறு துளிகள் தான் இன்னும் சிறப்பான சம்பவங்கள் உண்டு .
தொடரும்......
Comments
Post a Comment