அறிந்ததும் அறியாததும் பாகம் (21)........ 13 வயதிற்குட்பட்ட பாடசாலை வீரர்களுக்கான கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.....

 அறிந்ததும் அறியாததும் பாகம் (21)........

13 வயதிற்குட்பட்ட பாடசாலை வீரர்களுக்கான கடினபந்து  கிரிக்கெட் சுற்றுப்போட்டி.....

மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSV மற்றும்  KSC யின்  பங்களிப்பு.....  

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் ஏற்பாட்டில் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 வயதிற்குட்பட்டவர்களுக்கான கடின பந்து கிரிக்கெட் போட்டியோன்றை EPP அமைப்பு 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் கொண்டாட்டம் ஒன்றை நடாத்த (CRICKET FESTIVAL) ஏற்பாடு செய்தது. இச்சுற்றுப் போட்டியில் 13 வயதிற்குட்பட்ட இளம் வீரர்களை பங்குபெறச் செய்து அவர்களது திறமைகளை வெளிக்கொனரும் முகமாக நடைபெற்றது. இப்போட்டிகளில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் EPP  அணியினரும் மோதிக் கொண்டனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரை காலமும் யாரும் 13 வயதிற்குட்பட்டோருக்கான கடின பந்து கிரிக்கெட் போட்டியை நடாத்தவில்லை. முதல் தடவையாக EPP  அமைப்பு ஏற்பாடு செய்து மிகவும் கோலாகலமாக 2019 டிசம்பர் மாதம் 27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் மன்றேசாவில் அமைந்துள்ள புல் வெளி பூங்காவில் நடாத்ததுவதற்கு முதலில் திட்டமிட்டிருந்தாலும் பின்னர் அடை மழை காரணமாக சிவானந்தா மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இப்போட்டிகளுக்கான பரிசுப்பொருட்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து பெறப்பட்டது சிறப்பம்சமாகும். முதலாமிடத்தை பெறும் அணியினருக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்களும் சிறப்பாட்டகாரருக்கான விருது, சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது, சிறந்த துடுப்பாட்டகாரருக்கான விருது, சிறந்த தொடராட்டகாரருக்கான விருது மற்றும் கலந்து கொள்ளும் அணிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டன. இதன் இறுதிப்போட்டையை டான் தொலைகாட்சியின் ஊடாக நேரடியாக ஒளிபரப்ப ஒழுங்கும் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த போட்டியை காண்பதற்காக மட்டக்களப்பு மக்கள் ஆவலாக இருந்த போதிலும் இப்போட்டியில் பங்கு பற்ற இருந்த பாடசாலைகள் தம்மை தயார்படுத்தும் வேலைத்திட்டத்தின் அதன் பயிற்றுவிப்பாளர்கள் கடமையாற்றிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் டிசம்பர் மாதம் 27ம்,28 மற்றும் 29ம் திகதிகளில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள EPP அணியினருக்கு மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் அன்வர் டீன் அவர்களால் வெபர் உள்ளக மைதானத்தில் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. எமது வீரர்களும் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இவர்களை EPPயின் பயிற்றுவிப்பாளர் S.சுரேஸ் அவர்கள் அழைத்துச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்க KSVயும், KSCயும் அயாது உழைத்து வருவதை யாரால் மறுக்க முடியும் இப்போட்டித் தொடர் நடைபெற்றதா? யார் கிண்ணத்தை சுவீகரித்தது என்பதை  அடுத்த தொடரில் பார்ப்போம்.


தொடரும்......










Comments