2022ஆம் ஆண்டிற்கான முதலாவது சௌபாக்கிய வாரம் 24.03.2022 தொடக்கம் 31.03.2022 காலப்பகுதியில்....

 2022ஆம் ஆண்டிற்கான முதலாவது சௌபாக்கிய வாரம் 24.03.2022 தொடக்கம் 31.03.2022 காலப்பகுதியில்....



சமுர்த்தி திணைக்களத்தினால் வருடாந்தோறும் நடாத்தப்படும் சௌபாக்கிய வாரம் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டிற்காக நிகழ்வு 24.03.2022 தொடக்கம் 31.03.2022 வரை நாடுபூராவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமுர்த்தி திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் தேசிய வேலைத்திட்டமான 'பசுமையானதொரு தேசம்' தேசிய விவசாய வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கைப் புரட்சியின்  ஊடாக பயனாளிகளுக்கான நாற்றுக்களை வழங்கும் வேலைத்திட்டம் மிக முக்கியமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், வாழ்வாதார உதவிகள், வீட்டுத்திட்டங்கள் திறந்து வைத்தல், மற்றும் சமுர்த்தி வங்கியூடாக கடன்கள் வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்களும் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Comments