அறிந்ததும் அறியாததும் பாகம் (20)........ EPPயின் தோற்றத்தின் பின் மட்டு பாடசாலைகளின் கிரிக்கெட் வளர்ச்சி.....
அறிந்ததும் அறியாததும் பாகம் (20)........
EPPயின் தோற்றத்தின் பின் மட்டு பாடசாலைகளின் கிரிக்கெட் வளர்ச்சி.....
மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும் KSV யின் பங்களிப்பு.....
EPPயின் உருவாக்கத்தின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளையோருக்கான கிரிக்கெட் விளையாட்டு குறுகிய காலத்தில் பாரியதொரு வளர்ச்சியை கண்டுள்ளதை எம்மால் அன்று அவதானிக்க முடிந்தது. குறிப்பாக 13 மற்றும் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பயிற்சிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் அப்போதைய காலத்தில் ஆரம்பித்து அதற்கான பயிற்சிகனைள வழங்கியதுடன் அதற்கான உபகரணங்களையும் பெற்றுக் கொள்வதில் முயற்சி எடுத்து வந்தன. குறிப்பாக மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி, மட்டக்களப்பு கருவப்பங்கோணி விபுலானந்தா கல்லூரி, செட்டிபாளைய மகாவித்தியாலயம், கல்லாறு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் தங்கள் மாணவர்களிகன் திறமையை உணர்ந்து 13 வயதிற்குட்பட்ட அணியினரை உருவாக்கி வந்தனர்.
அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மத்தி வலயத்தின் பாடசாலையான ஏறாவூர் அறபா வித்தியாலயமும் முதல் முதலில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பித்து தம் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் செயற்பட்டை அப்பாடசாலையின் பெற்றோர்களின் உதவியுடன் ஆரம்பித்தனர். இப்பாடசாலையின் பெற்றோர்கள் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டிற்கான உபகரணங்கள் பெற்றுக் கொடுத்து உதவியிருந்தனர். அப்போது நடந்த இந்நிகழ்வின் போது பிரதி அதிபர் A.W.H.ஹிஜாஸ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான U.L.நபியுதீன், M.Y.M.றமீஸ், பயிற்றுவிப்பாளர்களான A.G.M.பாஸில், I.M.வஜீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதே போன்று மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையும் சிவானந்தா பாடசாலையில் கல்வி கற்று புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்களின் நிதி உதவியில் சிவானந்தா பாடசாலையில் கல்வி பயிலும் 13 வயதினருக்கான கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சிளை அன்று ஆரம்பித்திருந்தது. இதன் போது மாணவர்களுக்கான சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு சிறார்களின் கடினபந்து செயற்பாடுகள் பற்றி கூறப்பட்டது.
இவ்விரண்டு பாடசாலைகளும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 மற்றும் 15 வலயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியில் சிறந்த அணிகளாக திகழ்கின்றன. இதற்கு யார் பிள்ளையார் சுழி இடுவது என இருந்த போது கோட்டைமுனை விளையாட்ட கிராமமும், கோட்டைமுனை விளையாட்டு கழகமும் EPP மூலம் பிள்ளையார் சுழி இட்டதை அறிய முடிகின்றதா இதை சிலர் அறிவார்கள் பலர் அறிய மாட்டார்கள்...
மட்டக்களப்பில் மிகப்பரம்மாண்டமானதொரு கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்தது EPP அமைப்பு .
தொடர் தொடரும்.....
Comments
Post a Comment