1996 உலக சம்பியன் ஹீரோக்களுடன் மோதும் நம் (Batti Heroes) ஹீரோக்கள்......

 1996 உலக சம்பியன் ஹீரோக்களுடன் மோதும் நம்  (Batti Heroes) ஹீரோக்கள்......



எதிர்வரும் 03.04.2022 அன்று கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தால் அமைக்கப்பட்ட புற்தரை கிரிக்கெட் மைதானம் திறக்கப்படவுள்ள மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்த நாங்கள், மட்டக்களப்பு வாழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் இரட்டிப்பான மகிழ்ச்சி செய்தி ஒன்றை அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் 1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுத்தந்த இலங்கை கிரிக்கெட் அணியுன் (SRI LANKA 96 WORLD CAP LEGENDS) மட்டு ஹீரோக்கள் (Batti Heroes)  மோதவுள்ளனர் எனும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இதுவரை காலத்தில் மட்டக்களப்பில் வைத்து இந்த 1996ஆம் உலக கிண்ணத்தை பெற்றுத்தந்த அணியை சந்தித்தாக வரலாறு இல்லை அந்த வரலாற்றை கோட்டைமுனை விளையாட்டு கிராமம் 03.04.2022 அன்று நிறைவேற்றுவதுடன் நம் வீரர்கள் அவர்களுடன் சமமாக போட்டியில் விளையாடுவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இவற்றிக்கெல்லாம் முக்கிய காரணமாக திகழ்பவர்கள் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் இருந்து வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளே நாம் அன்றே சொல்லி விட்டோம் மட்டக்களப்பின் கிரிக்கெட் வளர்ச்சி புலம்பெயர்ந்தேரின் கைகளிலேயே தங்கியுள்ளது என்று அந்த விடயம் இன்று நிறைவேறி வருகின்றது என்றே கூறலாம்.

1996 அணிக்கு (SRI LANKA 96 WORLD CAP LEGENDS)  தலைவராக அர்ஜீனா ரணதுங்க அவர்கள் செயற்பட  1996 அணியில் விளையாடிய அரவிந்த டீ சில்வா, சனத் ஜெயசூரிய, களுவித்தாரண, ரவீந்திர புஸ்பகுமார, மார்வன் அத்தப்பத்து, சமிந்த வாஸ், உப்பில் சந்தன போன்றோருடன் கிறேகம் லப்ரோய், மகுரூப், இன்டிக டீ சேரம், வீரக்கோன், ஜெந்த மற்றும் சாமர சில்வா போன்றோர் களம் காணவுள்ளனர்.

நம்மவர் (Batti Heroes) அணியை பொருத்தவரை அணித்தலைவராக  கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மயூரதன் அவர்கள் செயற்பட சாருஹன் (தழிழ்யூனியன்), ஜெனிசியஸ் (சிவானந்தா விளையாட்டு கழகம்), கவின் (கனடா), வர்னபுர (நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், வியாஸ்காந் -(ஜவ்னா கிங்ஸ்), திவ்யேஸ் (இங்கிலாந்து), ருஸ்விந் (இங்கிலாந்து), லதுர்சன் (புனித மிக்கல் கல்லூரி), விதுர்சன் (மூர் விளையாட்டு கழகம்), நிஸ்திக் (றினோன் கிரிக்கெட் அக்கடமி), கமகே (இலங்கை கிரிக்கெட்) ஆகியோருடன் இங்கிலாந்தில் இருந்து இவர்களுக்கான பயிற்சியாளராக தியாகராஜா அவர்களும், முகாமையாளராக ஜவ்னா கிங்ஸ் அணியின் இணைப்பாளர் ஹரி வாகீசன் அவர்களும் செயற்படவுள்ளார்கள்.

ஒரு மட்டும் உண்மையாக புலப்படுகின்றது கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகலரையும் அரவணைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த பல முயற்சிகளில் இது பிரதானமாக காணப்படுகின்றது. 

"நாமும் மகிழ்வோம் மற்றவரையும் மகிழ்விப்போம்"

 






Comments