நானும் என் சமுர்த்தியும் 103ம் தொடர்.....
சிறப்பான முறையில் சமுர்த்தி வேலைத்திட்டங்களில் செயற்பட்டு வரும் கல்லடி வேலூர் கிராம சமுர்த்தி மக்களை மகிழ்ச்சியில் திழைக்க ஒரு சுற்றுப்பயணத்தை தாய் சமுர்த்தி சங்கத்தின் ஏற்பாட்டில் அழைத்துச் செல்ல திட்டமிட்டேன். அதன் படி பொலநறுவ சென்று புராதன சின்னங்களையும், சிகிரிய மற்றும் கோலடன் டெம்பில் போன்றவற்றை பார்வையிடுவது என முடிவெட்டப்பட்டு தீர்மானித்தோம்.
அங்கிருந்து மதிய உணவருந்திய பின் தொடர்ந்த எம் பயணம் கோல்டன் டெம்பிலை நோக்கி பயணித்தோம் அங்கே அமைந்திருக்கும் அற்புதமான புத்தர் சிலைகளை பார்வையிட்டு இனிதே பயணத்தை முடித்துக் கொண்டு மட்டக்களப்பை நோக்கிய எம் பயணத் தொடங்கியனோம். அந்த இனிமையான அனுபவத்தை இன்றும் நான் எண்ணிப்பார்க்கின்றேன்.இது ஒரு புறம் நடக்க இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் கீழ் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான முகாமைத்துவ பயிற்சி நெறி ஒன்றை மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் 25.11.2012 அன்று மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரட்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இச்செயலமர்வானது மூன்று தினங்கள் இடம்பெற்றது இதன் விரிவுரையாளர்களாக சமுர்த்தி வாழ்வாதார பணிப்பாளர் M.நடேசராசா அவர்களும், கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி S.யோகஸ்வரன் அவர்களும். கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் V.கனகசிங்கம் அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் I.அலியார் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரை வழங்கினர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் J.F.மனோகிதராஜ் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடரும்......
Comments
Post a Comment