KSV மைதானம் சமய சம்பிரதாய சடங்குகளுடன் புகுகுடி நிகழ்வு.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் 95சதவிகிதமான பணிகள் முடிவுற்றுள்ள மகிழ்ச்சியான செய்தியை நாம் முதலில் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். இன்னும் 100 நாட்களுக்குள் இம்மைதானம் மிகப்பிரமாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டு மட்டக்களப்பிற்கு மாத்திரமல்ல இலங்கை முழுவதும உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமான இம்மைதானம் திகழவுள்ளது.
இம்மைதான பணிகளில் மிக முக்கியமான பார்வையாளர் மற்றும் வீரர்கள் தங்கும் அறைகளை கொண்ட கட்டிடம் 10.02.2022 அன்று சமய சம்பிரதாயங்களுடன் சடங்குகள் நடாத்தப்பட்டது விசேட அம்சமாகும். முக்கியமாக இந்து மத ரீதியாகவும், கத்திதோலிக்க மத ரீதியாகவும் சமய நிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முதல் நாள் 10.02.2022 அன்று சடங்குகள் செய்யப்பட்டு 11.02.2022 அன்று குடிபுகு நிகழ்வு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அங்கத்தவர்கள் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்கள் குடும்பம் சகிதம் கலந்து கொண்டு சம்பிரதாய நிகழ்வான குடிபுகு நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
உண்மையில் கூறப்போனால் இம் மைதானம் பல தடைகளை தாண்டி பயணித்த ஒரு மைதானம் ஆகும் இனிவரும் காலங்களில் சகல தடைகளையும் தாண்டி பயணிக்க வேண்டிய ஒரு மைதானமாக இது மாற வேண்டும் அதற்காக இறையாசி வேண்டி நம்பிக்கை அடிப்படையில் ஒரே குடும்பமாக இன்று கோட்டைமுனை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமம் இப்பரிய பணியை செய்துள்ளது.
Comments
Post a Comment