விளையாட்டு துறை அமச்சர் நாமல் ராஜபக்ஸ அவர்களை சந்தித்த KSV குழுவினர்.....
கிழக்கு மகானத்தில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தால் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் அங்குரார்ப்பண விழா தொடர்பாக கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் நிர்வாக குழுவினருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அவர்களுக்குமான கலந்தரையாடல் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேனதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் 11.02.2022 அன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களும் மக்கள் தொடர்ப அதிகாரி த.ஈஸ்வரன் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் E.சிவநாதன் அவர்களும், செயலாளர் S.அருள்மொழி அவர்களும், பொருளாளர் S.ரஞ்சன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கோட்டைமுனை விளையாட்டு கிராமம் பாடசாலை மட்டம் தொடக்கம் கழகமட்டம் வரை பல உதவிகளை வழங்கி வருகின்றது. இதன் பாரியதொரு பணியாக கிழக்கிலங்கையிலேய மிகப்பிரமாண்டமான புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தையும் அமைத்து வருகின்றது.
இம் மைதானத்தில் 30 மேற்பட்ட வீரர்கள் தங்கி நின்று பயிற்சிளைப் பெற்று விளையாடக் கூடியவாறு அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 80மீட்டர் எல்லைகளை கொண்ட ஒரு மைதானமாகவும், 99 நீரடிப்பு குழாய்களை கொண்ட ஒரு மைதானமாகவும், நவீன இலத்திரனியல் புள்ளிக்கணப்பு பலகையைக் கொண்ட ஒரு மைதானமாகவும், அதி நவீன வலைப்பயிற்சி மையத்தை கொண்ட ஒரு மைதானதாகவும், நவீன மயமாக்கப்பட்ட வெள்ளை மற்றும் கருப்பு பார்வை திரைகளை கொண்ட ஒரு மைதானமாகவும் இது காணப்படுகின்றது.
கடந்த 2019ல் முடிவுறுத்தப்பட்டு அங்குரார்பணம் செய்ய வேண்டிய இம்மைதானம் பல இயற்கை காரணிகளாலும், கொரானா தொற்று காரணிகளாலும் தடைப்படடிருந்தது. எனவே தற்போது சகல பணிகளும் முடிவுறுத்தப்பட்டு இவ்வருடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அங்குரார்பணம் செய்யப்படவுள்ளது. எனவே இம்மைதானம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை வளம்பெறச் செய்வதுடன் மட்டக்களப்பின் வரலாற்று சான்றாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.
Comments
Post a Comment