மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் CBO அலுவலகம் திறந்து வைப்பு...
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஆரையம்பதி சமுர்த்தி வங்கி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி கிழக்கு. சபர் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அலுவலகம் 09.02.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. மண்முனை பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமச்சிவாயம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் புனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது . இந்நிகழ்வில் வங்கி முகாமையாளர் நவரஞ்சன் அவர்களும், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் கணக்காய்வாளர், பிரதேச சபை உறுப்பினர், கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சபர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment