செங்கலடி பிரதேச செயலகத்தில் இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் அவர்களால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பணவு வழங்கி வைப்பு...

 செங்கலடி பிரதேச செயலகத்தில் இராஜாங்க அமைச்சர் ச.வியாளேந்திரன் அவர்களால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பணவு வழங்கி வைப்பு...

2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி நிவாரண தொகையை சமுர்த்தி பயனாளிகளுக்கு  வழங்கும் நிகழ்வு செங்கலடி  பிரதேச செயலாளர்  K.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது  பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும்  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாளேந்திரன் அவர்களால் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பணவு வழங்கப்பட்டதுடன் சுயமாக முன் வந்து சமுர்த்தி நிவாரணத்தை ஒப்படைத்த சமுர்த்தி பயனாளிகளுக்கு பொற்சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் செங்கலடி முகாமைத்துவப் பணிப்பாளர் S.இராசலிங்கம் அவர்களும், தலைமையக முகாமையாளர் அவர்களும் சமுர்த்தி முகாமையாளர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்களும், கிராம உத்தியோகத்தர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டர்.












Comments