சமுர்த்தி உத்தியோகத்தர் இராமக்கிளியை கௌரவித்த மக்கள்.....
சுமார் இரண்டு வருடங்களாக காங்கேயன் ஓடை தெற்கு கிராமத்தில் சிறப்பான சேவையாற்றிய தற்போது ஆரையம்பதி கிழக்கு கிராமத்திற்கு இடமாற்றலாகி செல்லும் ராஜகோபால் இராமக்கிளி அவர்களை காங்கேயன் ஓடை மக்கள் மிகச்சிறப்பாக கௌரவித்து வழியனுப்பி வைத்துள்ளனர். பெரும்பாலும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான பாக்கியம் கிட்டுவது குறைவு ஆனால் தம் சிறப்பான அர்ப்பணிப்பான சேவை மக்களுக்கு வழங்கி இருந்தால் அவர்கள் தாமே முன்வந்து அவ் உத்தியோகத்தரை வாழ்த்தி வழியனுப்பி வைப்பது ஒரு தனி அழகு இதை தான் காஞகேயன் ஓடை மக்கள் செய்துள்ளார்கள்.
நான் ஆரையம்பதி சமுர்த்தி முகாமையாளர் K.நவரஞ்சனிடம் வினவிய போது கூறினார் சமுர்த்தி திட்டத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த காஞ்கேயன்ஓடை கிராமத்தை ராஜகோபால் இராமக்கிளி அவர்கள் கடமையேற்றதன் பிற்பாடு மிக வேகமாக சமுர்த்தி திட்டத்தில் முன்னேற்றத்தை கண்ட ஒரு கிராமமாக மாற்றப்பட்டதாக கூறினார். எனவே தன் சேவையை மிகச்சிறப்பாக செய்த ஒரு சேவையாளரை மக்கள் பாராட்டி இருப்பது மதிப்பிற்குரிய விடமாகும் என்றார். நாமும் வாழ்த்துவோம் ஆரையம்பதி கிழக்கு கிராமம் மிகச்சிறப்பாக மாற்றமடைய.
Comments
Post a Comment