சமுர்த்தி மாதாந்த மீளாய்வுக் கூட்டம்......

 சமுர்த்தி மாதாந்த மீளாய்வுக் கூட்டம்......



மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் 09.02.2022 அன்று மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் பணிப்பாளராக கடமையேற்று நடாத்திய முதல் மீளாய்வு கூட்டமாக இது அமைந்திருந்தது. இக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் 14 பிரதேச செயலகத்தில் இருந்தும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள், மற்றும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.

 இக் கூட்டத்தில் 12.02.2022 அன்று வழங்கப்படவுள்ள அதிகரிக்கப்பட்டுள்ள சமுர்த்தி நிவாரணம் பற்றியும் அன்றைய தினமே சமுர்த்தி பயனாளிகளுக்கு களத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன். சமுர்த்தி வாழ்வாதார உதவிகளையும், சௌபாக்கியா வீட்டு திட்டங்களை கையளிக்கும் நிகழ்வுகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதார திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும் மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 












Comments