வீட்டுத்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் ஊடாக நாற்று மேடையாளர்களுக்கான பயிற்சி பட்டறை.......
2022ம் ஆண்டின் சௌபாக்கியா தேசிய விவசாய வீட்டுத் தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நாற்று மேடையாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பட்டறை 07.02.2022 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது மண்முனை வடக்கு சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் K. பரமலிங்கம் அவர்களின் தலைமையில் கல்லடி கமநலசேவை திணைக்களத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் விவசாயத் திணைக்களத்தின் போதனாசிரியர்களான வேணி திருநவன் அவர்களும் மனோகரி மகேஸ் அவர்களும் வளவாளராக கலந்து கொண்டு பயிற்சிகளை நடாத்தி வருகின்றனர். இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.M.அலிஅக்பர் அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் வசந்தாதேவி உதயகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment