உடலம் அடக்கம் செய்வதற்கு முன் வழங்கப்பட்ட கொடுப்பணவு.....
சமுர்த்தி திட்டத்தின் ஊடாக பல்வேறு நலனுதவி திட்டங்கள் செய்யப்படுகின்றன. இதில் மிகவும் பிரதானமானது சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற நலனுதவி காப்புறுதி திட்டமாகும். இக்காப்புறுதி திட்டத்தில் இறப்பு, பிறப்பு, மருத்துவம், திருமணம் போன்றவற்றிக்கு கொடுப்பணவு வழங்கப்படுகின்றன.
இதில் இறப்பு நிகழ்ந்து உடலம் அடக்கம் செய்வதற்கு முன்பாக அக் குடும்பத்திற்கு கொடுப்பணவு வழங்க வேண்டும் என்பதே சமுர்த்தி திட்டத்தின் பாரிய வெற்றியாகும். இதன் அடிப்படையில் வெல்லாவெளி கிராமத்தை சேர்ந்த மாணிக்கப்போடி தனலெட்சுமி அவர்களின் இறப்பு நடைபெற்று உடலம் அடக்கம் செய்வதற்கு முன்பாக இக்குடும்பத்திற்கான சமுர்த்தி சமூக காப்புறுதி தொகையான இருபதாயிரம் (20,000) ரூபாய் அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இச்செயற்பாட்டை மிக விரைவாக செயற்படுத்த உதவிய பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், வலய முகாமையாளர் குறிப்பாக அப்பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு நாம் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment