நாற்று மேடையாளர்களுக்கு பயிர் விதைகள் வழங்கி வைப்பு.....
வீட்டுத் தோட்டத்தை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடுபூராவும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுத்தோட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்காக முன் ஆயத்த பணிகள் மிக விரைவாக செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் தெரிவு செய்ய்பட்ட நாற்று மேடையாளர்களுக்கு வழங்குவதற்கென பயிர்விதைகள் அந்தந்த கமநல சேவை திணைக்களத்தின் ஊடாக பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களங்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தன.
முதல் கட்டமாக கத்தரி, மிளகாய், கறிமிளகாய், தக்காளி போன்ற பயிர் விதைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நாற்று மேடையாளர்களுக்கு அந்தந்த பிரதேச செயலக சமுர்த்தி திணைக்கயளத்தால் 28.02.2022 அன்று வழங்கி வைக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் பயனாளிகளுக்கு இவ்நாற்று கன்றுகள் வழங்கி வைக்கப்படவேண்டும். எதிர்வரும் காலங்களில் குடும்ப தேவை கருதி ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுத்தோட்டம் செய்யப்பட வேண்டும் இதன் மூலம் நஞ்சற்ற உணவுகளை நாமே உற்பத்தி செய்து நம் உணவு தேவையை நாமே பூர்த்தி நிலை உருவாகும்.
Comments
Post a Comment