தேசிய வேலைத்திட்டமான வீட்டுத்தோட்டத்திற்கான பயிர் விதைகள் வழங்கி வைப்பு......
2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக தேசிய வேலைத்திட்டமான வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தற்கான பயிர் விதைகளை 25.02.2022 அன்று மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவால் உரிய கமநலசேவை திணைக்களத்தில் கையளிக்கப்பட்டது.
வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்தி மக்களின் அன்றாட தேவைக்கான உணவுகளை தாமே உற்பத்தி செய்து நஞ்சற்ற உணவை உண்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது. இதன் முதல் கட்டமாக கிராமங்கள் தோறும் நாற்றுமேடையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக தெரிவு செய்யப்பட்ட நாற்று மேடையாளர்களுக்கான பயிர் விதைகளை சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக கமநலசேவை திணைக்களத்தில் வழங்கப்பட்டு அதன் ஊடாக சமுர்த்தி கருத்திட்ட பிரிவிற்கு வழங்குவதன் மூலம் நாற்றுமேடையாளர்களுக்கு வழங்கி விவசாய போதனாசிரியரின் கண்காணிப்பில் கீழ் நாற்றுக்கன்றுகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளன.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான பயிர் விதைகளை 25.02.2022 ஆகிய இன்று உரிய கமநலசேவை திணைக்களங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.M.அலி அக்பர் அவர்களால் கையளிக்கப்பட்டது.
Comments
Post a Comment