போரதீவு பற்று சமுர்த்தி நலன்புரிச்சங்கத்தால் சேவைநலன் பாராட்டு கௌரவிப்பு..
போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக கடமையேற்றுள்ள S.புவனேந்திரன் அவர்களின் சேவையை பாராட்டி போரதீவு பற்று சமுர்த்தி நலன்புரிச்சங்கத்தால் 24.02.2022 அன்று சேவைநலன் பாராட்டு கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.
போரதீவு பற்று சமுர்த்தி நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சேவைநலன் பாராட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களை பாராட்டி வாழ்த்துப்பா வாழ்த்தப்பட்டு, மாலை அணிவித்து, பொன்னாடையும் அணிவித்து கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் போரதீவு பற்று பிரதேச செயலாளர் செல்வி இ.ராகுலநாயகி அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் போரதீவு பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வலய, வங்கி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment