மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சமுர்த்தி வங்கிகளை பார்வையிட்டார்......
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சமுர்த்தி பணிப்பாளராக கடமையேற்ற S.புவனேந்திரன் அவர்கள் முதல் தடவையாக சமுர்த்தி வங்கிகளை 22.02.2022 அன்று பார்வையிட்டார். இதன் அடிப்படையில் காலை செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியநாறு சமுர்த்தி வங்கியை பார்வையிட்டு அதன் விபரங்களை செங்கலடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், தலைமையக முகாமையாளர், மற்றும் வங்கி முகாமையாளர் அவர்களிடமும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் சமுர்த்தி அபிவிருத்தி கள உத்தியோகத்தர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்குமாறும் தங்களின் சேவைக்காக மக்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதன் போது கள சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடி இருந்தார்.
இதன் பின் மதியம் கிரான் பிரதேச செயலகத்திற்பட்ட சந்திவெளி சமுர்த்தி வங்கியை பார்வையிட்டு கிரான் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், தலைமையக முகாமையாளர், மற்றும் வங்கி முகாமையாளர் அவர்களிடமும் வங்கியின் தற்போதைய நிலை பற்றி அறிந்து கொண்டார். இதன் போது கள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களின் பணிபற்றி கலந்துரையாடினார்.
கடந்த வருடம் கரடியநாறு சமுர்த்தி வங்கி இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய கோப்பாவெளி சமுர்த்தி வங்கி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதே போல் சந்திவெளி சமுர்த்தி வங்கி இரண்டாக பிரிக்கப்பட்டு புலிபாய்ந்தகல் சமுர்த்தி வங்கி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இக்களவிஜயத்தின் போது மாவட்ட சமுர்த்தி வங்கிப்பிரிவு முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜா அவர்களும், சமுர்த்தி சிரேஸ்ட கணக்காய்வு உத்தியோகத்தர் E.முரளிதரன் அவர்களும், சமுர்த்தி சிரேஸ்ட புலானாய்வுத்துறை உத்தியோகத்தர் N.விஸ்வலிங்கம் அவர்களும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment