ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வீடு கையளிப்பு....
(U.LM. அஸீஸ்)
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நாடுபூராவும் செயற்படுத்தி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஏறாவூர்-1 கிராமத்தை சேர்ந்த சமுர்த்தி பயனாளியான மு.க றபீனா அவர்களுக்குரிய சௌபாக்கியா விசேட வீட்டினை 2022.02.02ஆம் திகதியன்று பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களினால் கையளித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஏறாவூர் நகர் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K. கணேசமூர்த்தி அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் S.M பஷீர் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் M.C.இஸ்ஹாக் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திருமதி நிஹாரா அவர்களும், சமூக அபிவிருத்தி உதவியாளர் U.LM. அஸீஸ் அவர்களும், பிரிவு உத்தியோகத்தர் A. நூர்ஜஹான் அவர்களும் மற்றும் CBO தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment