மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 74 வது சுதந்திர தின நிகழ்வுகள்....
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74 வது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டதில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய K.கருணாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக உயரதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் அரச நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி 74 வது சுதந்திர தின நிகழ்வு தேசியகொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்தலுடன் சிறப்பாக இடம்பெற்றது.
அரசாங்க அதிபரின் சுதந்திர தின உரையினை தொடர்ந்து, இராஜாங்க அமைச்சரின் விசேட உரையும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சிரேஸ்ட பிரஜையினை கௌரவிக்கும் முகமாக முன்னால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் S.புண்ணியமூர்த்தி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவம் வழங்கியதுடன், சுதந்திர தினத்தினை முன்னிட்டு பயன்தரும் மரக்கன்றுகள் அதிதிகளினால் நாட்டி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment