களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் 2022ம் ஆண்டுக்கான நிர்வாக தெரிவு......
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் 2022ம் ஆண்டுக்கான நிர்வாக தெரிவு......
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை வருடந்தோறும் புதுப்பித்தல் நடவடிக்கை ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் சகல சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களும் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வது வழமை, இதற்கமைய களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கான சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பொதுக் கூட்டம் 22.02.2022 செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் உப தலைவர் இ.தர்மலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் அவர்களும், தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார் அவர்களும், முகாமைத்துவப் பணிப்பாளர் K.உதயகுமார் அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது 2022ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதுடன், 2022ம் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் கலந்தரையாடப்பட்டன.
Comments
Post a Comment