சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்படும் சிப்தொற புலமைப்பரிசில் திட்டத்தின் கடைசி விண்ணப்ப திகதி 2022.02.25.......
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்படும் சிப்தொற புலமைப்பரிசில் திட்டத்தின் கடைசி விண்ணப்ப திகதி 2022.02.25.......
சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கான மாணவ/மாணவிகளுக்கான சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. 2021/2023ஆம் ஆண்டு க.பொ.த.(உ/த) கற்கும் மாணவ/மாணவிகளுக்கே இச்சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் வழங்கப்படும் சிப்தொற புலமைப் பரிசில் வழங்களில் பல மாணவ மாணவிகள் கடந்த காலங்களில் பலன் அடைந்துள்ளனர். மாதம் தோறும் 1500 ரூபாய் இரண்டு வருடங்களுக்கு சிப்தொற புலமைப் பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வரப்பிரசாதத்தை பெற்றுக் கொள்ள கீழ் வரும் தகுதியுடைய மாணவ/மாணவிகள் தங்களது பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களூடாக விண்ணப்பிக்க முடியும்.
01. தற்போது சமுர்த்தி நிவாரணம் பெற்று வரும் குடும்ப அங்கத்தவராக இருத்தல்.
02. 2020ஆம் ஆண்டு க.பொ.த.(சா/த) பரீட்சையில் ஒரே தடவையில் சித்தியடைந்து க.பொ.த.(உ/த) கற்பதற்கு தகுதி பெற்று பாடசாலைக் கல்வியைக் கற்றுக்கொண்டிருத்தல் வேண்டும்.
மேற்சொன்ன தகுதியினைக்கொண்டவர்கள் எதிர்வரும் 2022/02/18ஆம் திகதி தொடக்கம் 2022/02/25ஆம் திகதி வரை தங்களது பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரூடாக விண்ணப்பிக்க முடியும் என்பதை அறியத்தருகின்றோம்.
Comments
Post a Comment