2022ம் ஆண்டுக்கான சமுர்த்தி சிறுவர் கழகங்களை புதுப்பிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பம்.....

2022ம் ஆண்டுக்கான சமுர்த்தி சிறுவர் கழகங்களை புதுப்பிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பம்.....



சமுர்த்தி திட்டத்தில் மற்றுமொரு செயற்பாடு தான் சிறுவர்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதாகும். இச் செயற்பாடு சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து செயற்பட்டு வருகின்றது.  கிராமங்கள் தோறும் சமுர்த்தி சிறுவர் கழகங்களை ஆரம்பித்து அதன் ஊடாக தலைமைத்துவ பண்புகளை ஏற்படுத்துவதுடன் சிறார்களின் திறமையை வெளிக்கொனர்வதற்கும், சிறார்கள் மத்தியில் சேமிப்பு பழகத்தை ஏற்படுத்துவதற்கும்  இக்கழகம் உதவி வருகின்றது. இக்கழகத்தை வருடந்தோறும் புதிப்பித்து செயற்படுத்தி வருகின்றது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவின் ஓட்டமாவடி 208C கிராம உத்தியோகத்தர் பிரிவில் வானவில் சமுர்த்தி சிறுவர் கெக்குழு கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும்  2022/02/20ஆம் திகதி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் M.U.S.ஜெஸீமா மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் M.N.M.சாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாக தெரிவை மேற்கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர் கழக அங்கத்தவர்களிலிருந்து பின்வருவோர் நிருவாக சபை உறுப்பினர்களாக சபையோரினால் தெரிவு செய்யப்பட்டார்கள். 

 தலைவர் மு.இ.முகம்மது இன்ஷாப்,  செயலாளர்  ம.றிப்ஸி, பொருளாளர் அ.மு.அஸ்மத், உப தலைவர் கா.பா.றிஸானா, உபசெயலாளர்  மு.இ.பா.நதா,  நிர்வாக சபை உறுப்பினர்களாக நௌ.பா.நதா நஸ்ரின், ந.பா.அதீபா,  ச.பா சமீதா,  பா.நுஸ்ரத் ஹனான், நா.நுஸைக் அகம்மட்,  ற.மு.அஸ் அத், ல.மு.சர்பான்,    ஹ.மு.மு.பஸ்லூன்.                   '               

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களில் சிப்தொற புலமைப்பரிசில் பெற தகுதியானவர்களுக்கு புலமைப்பரிசில்க்கான விண்ணப்பங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். 











Comments