அறிந்ததும் அறியாததும் பாகம் (18)........ நகராமல் இருந்தது மட்டக்களப்பு மேற்கு பாடசாலை கிரிக்கெட் சங்கம் ....

 அறிந்ததும் அறியாததும் பாகம் (18)........

நகராமல் இருந்தது மட்டக்களப்பு மேற்கு பாடசாலை கிரிக்கெட் சங்கம் ....

மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும்  KSV யின்  பங்களிப்பு.....  

மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கமும் மரணிக்கும் கட்டத்தில் இருக்க, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலை கிரிக்கெட் சங்கமும் ஒரு துளி கூட நகராமல் அசையாமல் இருந்தது.  கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கும் கவலையான விடயமாகவே இது இருந்தது. பரவாயில்லை இதற்கெல்லாம் ஒரு தீர்வு வரும் வரை நாம் எம் பயணத்தை தொடர்வோம் என எண்ணியதாக மற்றைய பாதையில் வைத்த காலை நிலையாக வைக்கத் தொடங்கி ஒரு கன்னி முயற்சியை மேற் கொண்டது.

 

EPP அமைப்பை இளம் கிரிக்கெட் வீரர்களை இலக்காக கொண்டு செயற்படத் தொடங்கியது. "நாமும் வளர்ந்து மற்றவரையும் வளர வைப்போம்" எனும் கருத்திட்டத்திற்கு அமைவாக 13 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுடன் போட்டிகளில் பங்குபற்றி மட்டக்களப்பில் பாடசாலை கிரிக்கெட்டை வளர்க்கும் முயற்சியில் EPP அமைப்பு மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியுடன் 13 வயதிற்குட்பட்டோருக்கான கடின பந்து கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இப்போட்டியானது  12.10.2019 அன்று மன்றேசாவில் உள்ள வயல்வெளி பூங்காவில் நடைபெற்றது. இதுவே  EPP அணி முதல் முதலில் ஒரு பாடசாலையுடன் மோதிய போட்டியாகும். முதலில் துடுப்பெடுத்தாடிய 13 வயதிற்குட்பட்ட புனித மிக்கல் கல்லூரி கிரிக்கட் அணியினர் 9 விக்கட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  EPP   அணியினர் 108 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் 13 வயதிற்குட்பட்ட அணியினர் 74 ஓட்டங்களால் வெற்றியீட்டிக் கொண்டனர்.

இவ் வெற்றியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தினால் உருவாக்கப்பட்ட EPP அமைப்பினர் வெற்றிகரமாக தம் பயணத்தை ஆரம்பித்து கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்தது. இந் நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் தலைவரான E.சிவநாதன் அவர்களும், பொருளாளர் S.ரஞ்சன் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதி S.காசிப்பிள்ளை அவர்களும், பொருளாளர்  K.தயாசிங்கம் அவர்களும், அங்கத்தவர்களான நிமால் மோசஸ்,  ரெ.உமாபதி,  த.சஜிதராஜ் அவர்களும்,  கலந்து கொண்டதுடன் EPP  திட்ட இணைப்பாளர் V.வசந்தமோகன் அவர்களும், EPPயின் பயிற்றுவிப்பாளர்களான C.யசோக்குமார் அவர்களும்,  T.மதிராஜ் அவர்களும்,,  கலந்து கொண்டனர். புனித மிக்கல் கல்லூரி சார்பாக பயிற்றுவிப்பாளர் திரு.சகாந்தன் அவ்வணியை வழிநடத்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இப்போட்டி ஒரு முக்கியமான போட்டியாகவே காணப்பட்டது. ஒன்று மன்றேசா கிராமத்தில் 13 வயதிற்குட்பட்டோர் விளையாடக் கூடிய ஒரு அழகான மைதானம் இருப்பதை கண்டடைந்தது. மற்றையது பாடசாலைகளை ஒன்றிணைத்தது, மற்றையது புதிய புதிய இளம் வீரர்களை காணக் கூடியதாக இருந்ததுடன் சில பாடசாலைகள் தாமாக முன் வந்து 13 வயதிற்குட்பட்டோருக்கான அணியை உருவாக்க முயற்சித்தது. இதுவெல்லாம் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் எடுத்துக் கொண்ட முயற்சி என்பதை உங்களால் அறிய முடியவில்லையா? இன்னும் சம்பவம் உண்டு எழுதுகின்றேன்...

தொடர் தொடரும்.....



















Comments