அறிந்ததும் அறியாததும் பாகம் (17)........ மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பாடசாலை கிரிக்கெட் சங்கம் அங்குரார்பணம்.....

 அறிந்ததும் அறியாததும் பாகம் (17)........

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பாடசாலை கிரிக்கெட் சங்கம் அங்குரார்பணம்.....

மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும்  KSV யின்  பங்களிப்பு.....  

மட்டக்களப்பு நகர பாடசாலைகளை இனைத்து பாடசாலை கிரிக்கெட் சங்கம்  அமைத்த கோட்டைமுனை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் மட்டக்களப்பில் பாடசாலை கிரிக்கெட் வளம்பெற வேண்டும் எனும் கருத்தில் முன்நோக்கி செல்ல முற்பட்ட போது கைகொடுத்தது தான் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம். எனவே இதற்கான முழு நிதியினையும் வழங்கி மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் பாடசாலைகளுக்கான கிரிக்கெட் சங்கம் 2019.09.25ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் Pசடாட்சரராஜா மற்றும் கிழக்கு பல்கலைகழகத்தின் ஆங்கில விரிவுரையாளரான சதாசிவம் சசிதரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் பாடசாலை கிரிக்கெட் சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்திற்கு தலைவராக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளர் சிவானந்தம் ஸ்ரீதரன் அவர்களை தெரிவு செய்யப்பட்டு 25.09.2019ஆம் திகதி கன்னங்குடா மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் பிரதமவிருந்தினர்களாக  மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசகருமான பேரின்பராஜா சடாற்சரராஜா மற்றும் கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாளரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசகருமான சதாசிவம் சசிதரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

  இந்நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் அவர்கள் இச்சங்கத்தை ஆரம்பிக்க முதலில் பிள்ளையார் சுழி இட்டது கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவரான பேரின்பராஜா சடாற்சரராஜா தான் இவருக்கு தான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டவராக உள்ளதாக தெரிவித்தார். மேலும் கூறுகையில் கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் சதாசிவம் சசிதரன் எம்முடன் இச்சங்கத்தில் இணைந்து கொண்டது தமக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி தருவதாக கூறியதுடன் உதைபந்தாட்டத்தில் எம் வலயம் மேலோங்கி செல்வதைப் போன்று கிரிக்கெட் விளையாட்டிலும் நாம் முன்னேர வேண்டும் இதற்காக மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் புலம் பெயர்ந்து வாழும் அங்கத்தவர்கள் உதவுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பாக குறிப்பிட்டார்.

  இதனைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாளரும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசகருமான சதாசிவம் சசிதரன் உரையாற்றுகையில் மட்டக்களப்பின் அன்றைய கல்வி இன்றைய கல்வி என மிக நிதானமாக உரையை  தொடர்ந்து  இப்பாடசாலை கிரிக்கெட் சங்கம் மட்டக்களப்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டு தற்போது மரணிக்கும் தறுவாயில் உள்ளதாகவும், அதே போல் இங்கு அல்லாமல் சிறப்பாக செயற்பட வேண்டும் அதற்கு தங்களின் தலைவர் துடிப்பாக செயற்படுவார் என குறிப்பிட்டார். இச்சங்கத்திற்கான நிதியீட்டத்ததை மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் புலம்பெயர்ந்து வாழும் உறுப்பினர்களான புவனசிங்கம் வசீகரன், இராமநாதன் உதயராஜன், பேரின்பராசா ரமேஸ்குமார் ஆகியோர் வழங்கியுள்ளனர். இவ்வுதவியை உயர்த்திக் கொள்வதாயின் நீங்கள் தான் இப்பாடசாலை கிரிக்கெட் சங்கத்தை உயிர்ப்புள்ள ஒரு சங்கமாக வழிநடாத்தினால் மாத்திரமே செயற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

  இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஊடாக 1000 பாடசாலை கல்வி புத்தகங்கள் மட்டக்களப்பு பிராந்திய தலைவர் LION N.தர்சன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கான பாடசாலை கிரிக்கெட் சங்கத்திற்கான காசோலையும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவரான பேரின்பராஜா சடாற்சரராஜா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

 ஆனால் இந்த மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலை கிரிக்கெட சங்கமும் ஒரு வழுவிழந்த சங்கமாகவே காணப்பட்டது. இது தொடர்பாக பல முறை உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடிய போதும் பயனளிக்கவில்லை. அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்துடன் அதுவும் முடிவுக்கு வந்தது. இது பலருக்கு அறியாத விடயமாகவே காணப்பட்டது, இன்று அறிந்து கொள்ளுங்கள்.

இப்போது சொல்லுங்கள் கோட்டைமுனை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த அயராது உழைத்துள்ளதை நம்புவீர்களா? இன்னும் உண்டு எழுதுகின்றேன்....

தொடர் தொடரும்.....












Comments