அறிந்ததும் அறியாததும் பாகம் (16)........
EPPயின் வெற்றிப்பாதை தொடங்கியது....
மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும் KSVயின் பங்களிப்பு.....
பாடசாலை மட்ட கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் ஊடாக EPP அமைப்பு உருவாக்கப்பட்டு 30 இளம் வீரர்கள் சிற்றி லக்கி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டதை அவதானித்த பலரும் தம் பிள்ளைகளை EPP அமைப்பில் இனைத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். குறித்த ஒரு வார காலத்தில் மேலும் 30 சிறார்கள் EPP அமைப்பில் இனைய ஆர்வம் கொண்டு விண்ணப்பித்திருந்தனர். இதுவே எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.
60 இளம் சிறார்களைக் கொண்டு EPP முதல் போட்டியை சிற்றிலக்கி மைதானத்தில் நடாத்த தீர்மானித்தது. இளையோருக்கு வழங்கப்பட்ட சீருடையில் இரு அணிகளாக பிரிந்து போட்டியில் பங்குபற்றினர். இதில் கூடுதலாக புதிய வீரர்களே எம்முடன் இணைந்து கொண்டார்கள்.
25.08.2019 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் K.சிவநாதன் அவர்களும், பொருளாளர் S.ரஞ்சன் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் P.சடாற்சரராஜா அவர்களும், பொருளாளர் K.தயாசிங்கம் அவர்களும், நிர்வாக அங்கத்தவர்களான T.சஜிதராஜ் அவர்களும், R.உமாபதி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது EPP சிறார்களின் கிரிக்கெட் பயிற்சிக்காக பயிற்சி வழங்குவதற்கென ஜோன்சன் ஐடா ஒப்பந்த அடிப்படையில் இனைந்து கொண்டு பயிற்சியாளராக செயற்பட்டு வந்தார். இலங்கை தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் கிழக்கிலங்கையில் இருந்து முதலாவதாக இடம் பிடித்த பெருமையை கொண்ட ஒரு பெண்மணியே ஜோன்சன் ஐடா ஆவார். மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியின் பழைய மாணவியான இவர் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர் என்பதிலும் பெருமையடைகின்றோம். தற்போது மட்டக்களப்பு விவேகாணந்தா பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், இவர் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்கா சுற்றுப்பயணம் மேற் கொண்ட போது அப்போட்டியில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும். முதலாம் தர பயிற்றுவிப்பாளர் பயிற்சிகளை முடித்துள்ள இவர் விளையாட்டு துறைக்கான டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனாலு இவரின் அர்பணிப்பான சேவை EPP அமைப்பிற்கு கிடைக்கவில்லை இவரும் வந்த கையுடன் இடைநடுவில் விட்டு விட்டு சென்றார்.
இது ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேலும் மேம்படுத்த ஒரு யுக்தியை கோட்டைமுனை விளையாட்டு கழகத்துடன் இணைந்து மட்டக்களப்பில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்கள் மேற் கொண்டனர் அதனைப்பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.
தொடர் தொடரும்......
Comments
Post a Comment