அறிந்ததும் அறியாததும் பாகம் (15)........ Emerging Players Programme (EPP) பயிற்சி வழங்க இங்கிலாந்தின் யார்க்ஷயர் கழகத்தினர் .....

 அறிந்ததும் அறியாததும் பாகம் (15)........

Emerging Players Programme (EPP) பயிற்சி வழங்க இங்கிலாந்தின் யார்க்ஷயர் கழகத்தினர் .....     

மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும்  KSV யின்  பங்களிப்பு.....  

முதல் நாள் EPP அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் அங்கத்தவர்களால் எமக்கு கிட்டியது. அது தான் இங்கிலாந்தின் யார்க்ஷயர் கழகத்தினர் (Yorkshire County Cricket Club)  மட்டக்களப்பிற்கு வந்துள்ளனர் அவர்களை தொடர்பு கொண்டு EPP இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான முதல் பயிற்சி பட்டறையை ஆரம்பிக்குமாறு கோரி இருந்தனர்.

எமக்கு அடித்தது அதிஸ்டம் எனக்கருதி நாமும் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய போது அவர்களும் இலங்கையில் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக தான் இங்கு வந்துள்ளதாகவும் எமக்கான பயிற்சி பட்டறையை நடாத்துவதற்கு அவர்கள் சம்மதித்து இருந்தனர்.


இங்கிலாந்தின் முக்கிய கவுண்டி கழகமான யார்க்ஷயர் கழகத்தின் (Yorkshire County Cricket Club)  அங்கத்தவர்கள் முதல் பயிற்சிளை 13.08.2019 ஆகிய அன்று  சிற்றிலக்கி மைதானத்தில் Emerging Players Programme வீரர்களுக்கு பயிற்சி பட்டறையை வழங்கி இருந்தனர். இதன் போது ஒரு விடயத்தை குறிப்பிட மறந்து விட்டேன் எமது 30 இளம் வீரர்கள் பயிற்சியினை மேற் கொள்ள பல தடைகள் வந்தன மைதானத்தில் இருந்து எம்மை விரட்டி அடித்தனர், ஆனால் எம் வீரர்களுக்கு இடமளித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும் எனும் தூர சிந்தனையுடன் எம்முடன் இணைந்து கொண்ட மட்டக்களப்பு சிற்றி லக்கி விளையாட்டு கழகத்திற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிள்றோம். குறிப்பாக சிற்றி லக்கி விளையாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கும் இன்றும் எம் நன்றிகள் ஏன் என்றால் இன்றும் எம் இளம் சிறார்கள் முதல் KSC கிரிக்கெட் அணி வீரர்களும் சிற்றிலக்கி விளையாட்டு கழத்தின் மைதானத்தில் தான் பயிற்சிகளை மேற்கொண்ட வருகின்றார்கள்.

 

மேலும் ஒரு தகவலையும் கடந்த தொடரில் குறிப்பிட மறந்து விட்டேன் EPPயின் முதல் பயிற்றுவிப்பாளர்களாக பல பயிற்றுவிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர். இதில் பகீரதன், நிமால் மோஸஸ், யசோக்குமார், கிருஸ்ணராஜாஜி, மதிராஜ், முகுந்தன், சுரேஸ் போன்றோரை குறிப்பிடலாம்.

இப்படியாக கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் மட்டக்களப்பில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த பல விடயங்களை மேற் கொண்டு வந்தது. இது பலருக்கு அறியாத விடயமாகவே இருந்திருக்கும் என நான் நம்புகின்றேன்.

EPPயின் வளர்ச்சி அடுத்த கட்டத்தில் எப்படி இருந்தது என்பதை பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம். இன்னும் பல சுவாரஸ்சியமான தகவல்கள் உள்ளன.

தொடர் தொடரும்.......













Comments