14.02.2022 ஆகிய இன்று அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பணவு வழங்கும் நிகழ்வு.....
2022ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பணவு 14.02.2022 ஆகிய இன்று நாடுபூராவும் சமுர்த்தி பயனாளிகளுக்கு அவர்களது கிராமத்திலேயே வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 3500 ரூபாய் பெற்ற சமுர்த்தி பயனாளிக்கு 4500 ரூபாய் அதிகரிக்கப்பட்ட தொகையாகவும், 2500 ரூபாய் பெற்ற சமுர்த்தி பயனாளிக்கு 3200 ரூபாய் அதிகரிக்கப்பட்ட தொகையாகவும், 1500 ரூபாய் பெற்ற சமுர்த்தி பயனாளிக்கு 1900 ரூபாய் அதிகரிக்கபப்ட்ட தொகையாகவும் வழங்கப்படவுள்ளது.
Comments
Post a Comment