அறிந்ததும் அறியாததும் பாகம் (14)........
KSVஉருவாக்கிய Emerging Players Programme (EPP)…..
மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும் KSV யின் பங்களிப்பு.....
மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலைகளை இணைத்து பாடசாலை கிரிக்கெட் சங்கத்தை உருவாக்கி அதிலும் வெற்றிகானாத கோட்டைமுனை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் பாசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கியாவது முன்னேற்றமடையாலாம் என சிந்தித்து மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் அங்கத்தவர்களின் உதவியுடன் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, புனித மிக்கல் கல்லூரி, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கியது அதுவும் முன்னேற்றம் காணாததால் 13 வயதிற்குட்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்களை ஒன்று திரட்டி ஒரு அமைப்பை நாம் முதலில் மட்டக்களப்பில் உருவாக்குவோம் என மட்டக்களப்பில் இருந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரும் மூத்த உறுப்பினருமான புவனசிங்கம் வசீகரன் அவர்கள் ஆலோசனை வழங்கி கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் கீழ் உருவாக்கப்பட்டது தான் இந்த Emerging Players Programme (EPP) எனும் இளையோரை வளர்த்தெடுக்கும் அமைப்பாகும்.
ஆரம்பத்தில் இவ்வமைப்பில் உள்ள சிறார்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு மைதானம் கூட இல்லாத நிலை காணப்பட்டது. சிலர் இடங்களை கொடுத்து பின்னர் அவ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. இவ்வமைப்பை வளர விடாமல் தடுக்க பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. இருந்த போதிலும் இவ்வமைப்பை துரித கதியில் நிலையான ஒரு அமைப்பாக 12.08.2019 அன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் அணித்தலைவரான பந்துல வர்ணபுர அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது மாற்றத்தின் ஒரு படியாக நாம் கருதினோம்.
இதில் முதல் கட்டமாக இணைந்து கொண்ட 30 இளையோருக்கும் சீருடை, பாதணி இலவசமாக வழங்கப்பட்டதுடன் EPP அமைப்புடன் ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. இவ்வமைப்பில் இணைந்து கொள்ள மட்டக்களப்பில் உள்ள சகல இளையோருக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது குறிப்பாக பல பாடசாலைகளிலும் இருந்து இளையோர் இவ்வமைப்பில் இணைந்து கொண்டனர். இதன் போது இவ்விளையோரை பயிற்றுவிப்பதற்காக 10 பயிற்றுவிப்பாளர்களையும் அன்றைய தினமே நியமிக்கப்பட்டு சீருடையும் வழங்கப்பட்டது. அதே போல் இவ்வமைப்பை நிர்வகிப்பதற்காக திட்ட இணைப்பாளராக V.வசந்தமோகன் அவர்கள் நியமிக்கப்பட்டு மட்டக்களப்பில் மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது இந்த EPP அமைப்பு.
இதன் நோக்கம் மட்டக்களப்பில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை இனம் கண்டு அவர்களுக்கான ஒரு பயிற்சி மையம் அமைப்பட்டு அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்கி இலங்கையின் தேசிய அணிக்கு கொண்டு செல்வதேயாகும்.
இந்நிகழ்வுகளில் இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த அங்கத்தவரான P.ரமேஸ்குமார் அவர்களும், கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த அங்கத்தவரான S.ரமேஸ்கண்ணா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர்களுடன் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் E.சிவநாதன் அவர்களும், செயலளர் S.அருள்மொழி அவர்களும், பொருளாளர் S.ரஞ்சன் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் P.சடாற்சரராஜா அவர்களும், கழக அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த EPP அமைப்பிற்கு முதல் சீருடைக்கான அனுசரனையை மட்டக்களப்பில் பிரபலமான வர்த்தகரான கல்கி டிஜிடல் நிறுவனம் வழங்கி இருந்தது. இதுவே எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இதை சிலர் அறிந்திருக்கலாம் சில சமயம் அறியாமலும் இருந்திருக்கலாம் இப்போது அறியத்தந்துள்ளோம்.
முதல் பயணத்தை தொடங்கினோம் அடுத்த மிக மகிழ்ச்சியான செய்தி ஒன்று எமக்கு கிட்டியது அது என்னவென்று அடுத்த தொடரில் பார்ப்போம்.....
தொடர் தொடரும்......
Comments
Post a Comment