அறிந்ததும் அறியாததும் பாகம் (13)........ மெதடிஸ்த மத்திய கல்லுரிக்கு கிரிக்கெட் உபகரணம் வழங்கி வைப்பு.....

 அறிந்ததும் அறியாததும் பாகம் (13)........

மெதடிஸ்த மத்திய கல்லுரிக்கு  கிரிக்கெட் உபகரணம் வழங்கி வைப்பு.....



     மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும்  KSV யின்  பங்களிப்பு.....  

மட்டக்களப்பு பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சிக்கு கோட்டைமுனை விளையாட்டு கிராமமும், கோட்டைமுனை விளையாட்டு கழகமும் இணையற்ற சேவையை வழங்கி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இருந்த போதிலும் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதாகவோ, பயிற்சிகள் நடைபெறுவதாகவோ தென்படாமலே இருந்தன இருந்த போதிலும் நம்மவர் சேவை தொடர்ந்த படியே இருந்தது.

மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் கிரிக்கெட் உபகரணம் தந்து உதவுமாறு பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு.கிரிதராஜ்  அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். நாம் நகரத்தில் மேம்படுத்த வேண்டிய பாடசாலைகளில் ஒன்றாக தென்பட்ட மெதடிஸ்த மத்திய கல்லுரிக்கான கிரிக்கெட் உபகரணங்களை வழங்குவதென முடிவெட்டப்பட்டு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் E.சிவநாதன் அவர்கள் அதற்குரிய பணிகளை ஆரம்பித்தார்.

02.07.2019 அன்று மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் R.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி பணிப்பாளர் V.லவக்குமார் அவர்களும், மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பிளர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதி S.காசிப்பிள்ளை கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் செயலாளர் S.அருள்மொழி மற்றும் பொருளாளர் S.ரஞ்சன் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பொருளாளர் K.தயாசிங்கம் மற்றும் அங்கத்தவர்களான V.வசந்தமோகன்K.பகீரதன், S.அன்பழகன் போன்றோர் கலந்து கொண்டனர்.

பாடசாலைகளுக்கான கிரிக்கெட் வளர்ச்சி பாதை எனும் என்னக்கருவில் கோட்டைமுனை விளையாட்டு கழகம், கோட்டைமுனை விளையாட்டு கிராமம் இந்துக்கல்லூரியில் தொடங்கி புனித மிக்கல் கல்லூரி வரை நகர்ந்து சிவானந்தா பாடசாலையை கடந்து மெதடிஸ்த மத்திய கல்லூரியை வந்தடைந்து இருந்தது. ஆனால் இந்த நான்கு பாடசாலைகளையும் இணைத்து மட்டக்களப்பு பாடசாலை கிரிக்கெட் சங்கத்தினை வளர்த்தெடுக்க செயற்பட்ட போது அது தடம்மாறியது தான் வேதனையான விடயமாக மாறியது. குறிப்பாக அடி மட்டத்தில் இருந்து அதுவும் 13 வயதிற்குட்பட்ட வீரர்களை உருவாக்குவதே கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் நோக்காக இருந்தது. அப்போது தான் சுமார் ஐந்து ஆண்டுகளில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரரை உருவாக்கலாம் எனும் திட்டத்திற்கமையவே பாடசாலை கிரிக்கெட்டினை வளர்த்தெடுக்க அயராது உழைத்தது. கோட்டைமுனை விளையாட்டு கிராமம்.

இவ்விடயம் பலருக்கு அறியாமலும் சிலருக்கு அறிந்ததாகவும் இருந்திருக்கும். இச் செயற்பாடும் பூரண திருப்தி அடையாத கட்டத்தில் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மற்றுமொரு மாற்றுத்திட்டத்தை செய்ய திட்டமிட்டது இவை தொடர்பான தகவலை அடுத்த தொடரில் பார்ப்போம்....

தொடர் தொடரும்....











Comments