அதிகரித்த சமுர்த்தி நிவாரணம் 12.02.2022 தொடக்கம் வழங்கப்படும்.......
2022ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்டவாறு சமுர்த்தி நிவாரணம் பெறும் சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரணம் அதிகரிக்கப்பட்டு 12.02.2022 முதல் வழங்கப்படவுள்ளது எனும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதன் அடிப்படையில் 3500 ரூபாய் சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்த ஒரு சமுர்த்தி பயனாளிக்கு 4500 ரூபாவாக நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் சமூக பாதுகாப்பிற்கு 200 ரூபாவும், வீட்டு லொத்தருக்கு 100 ரூபாவும், கட்டாய சேமிப்பிற்கு 400 அறவிடப்பட்டு சமுர்த்தி வங்கியூடாக சமுர்த்தி பயனாளிக்கு 3800 வழங்கப்படவுள்ளது.
அதே போல் 2500 ரூபாய் சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்த ஒரு சமுர்த்தி பயனாளிக்கு 3200 ரூபாவாக நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் சமூக பாதுகாப்பிற்கு 150 ரூபாவும், வீட்டு லொத்தருக்கு 100 ரூபாவும், கட்டாய சேமிப்பிற்கு 300 அறவிடப்பட்டு சமுர்த்தி வங்கியூடாக சமுர்த்தி பயனாளிக்கு 2650 வழங்கப்படவுள்ளது.
இதே போல் 1500 ரூபாய் சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்த ஒரு சமுர்த்தி பயனாளிக்கு 1900 ரூபாவாக நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் சமூக பாதுகாப்பிற்கு 130 ரூபாவும், வீட்டு லொத்தருக்கு 100 ரூபாவும், கட்டாய சேமிப்பிற்கு 170 அறவிடப்பட்டு சமுர்த்தி வங்கியூடாக சமுர்த்தி பயனாளிக்கு 1500 வழங்கப்படவுள்ளது.
இந்த அதிகரித்த சமுர்த்தி நிவாரணத்தை 12.02.2022 அன்று கிராமங்கள் தோறும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நேரடியாக களத்தில் சென்று வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment