அறிந்ததும் அறியாததும் பாகம் (12)........ சிவானந்தா பாடசாலைக்கு கிரிக்கெட் உபகரணம் வழங்கி வைப்பு..... மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும் KSV யின் பங்களிப்பு.....

 அறிந்ததும் அறியாததும் பாகம் (12)........

சிவானந்தா பாடசாலைக்கு கிரிக்கெட் உபகரணம் வழங்கி வைப்பு.....

     மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும்  KSV யின்  பங்களிப்பு.....  



ஏற்கனவே சிவானந்தா பாடசாலையுடன் கலந்துரையாடியதன் பயனாக சிவானந்தா மைதான புனரமைப்பு தடைப்பட்டு போக, பாடசாலையின் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படும் எனும் உறுதி மொழிக்கு அமைவாக சிவானந்தா பாடசாலைக்கான கிரிக்கெட் உபகரணங்களை வழங்க கோட்டைமுனை விளையாட்டு கிராமம் தயாரானது.

முதலில் இந்துக்கல்லூரிக்கான கிரிக்கெட் உபகரணம் வழங்கியதை தொடர்ந்து புனித மிக்கல் கல்லூரிக்கும் கிரிக்கெட் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து 01.07.2019 அன்று சிவானந்தா பாடசாலைக்கான கிரிக்கெட் உபகரணங்கள் பாடசாலை மண்டபத்தில் வைத்து மாணவர்களிடம் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் E.சிவநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

சிவானந்தா பாடசாலையின் அதிபர் T.யசோதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி பணிப்பாளர் V.லவக்குமார் அவர்களும், சிவானந்தா பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை நலன் விரும்பிகள், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதி S.காசிப்பிள்ளை கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் செயலாளர் S.அருள்மொழி மற்றும் பொருளாளர் S.ரஞ்சன் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பொருளாளர் K.தயாசிங்கம் மற்றும் அங்கத்தவர்களான V.வசந்தமோகன், K.பகீரதன், S.அன்பழகன் போன்றோர் கலந்து கொண்டனர்.

கோட்டைமுனை விளையாட்டு கழகம் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் தன்னாலான சகல நடவடிக்கையும் செய்து பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த அயராது உழைத்தது, ஆனால் இது ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த நிகழ்வின் போதும் கூட உரையாற்றிய கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் E.சிவநாதன் அவர்கள் மட்டக்களப்பு பாடசாலை கிரிக்கெட் சங்கத்தை இயங்கச் செய்யும் படி கோரி இருந்தார்.

இந்த விடயம் பலருக்கு அறியாத விடயமாகவே இருந்திருக்கும், ஒரு சிலருக்கே அறிந்த விடயமாகவே இது இருந்திருக்கும். இந்த நிகழ்வு நடந்து தற்போது 30 மாதங்கள் கடந்து விட்டன மட்டக்களப்பு பாடசாலை கிரிக்கெட் சங்கம் புத்துயிர் பெறவில்லை.

மற்றுமொரு பாடசாலை கிரிக்கெட் உபகரணங்கள் கோட்டைமுனை விளையாட்டு கழகத்திடம் கோரி இருந்தது இதைப்பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொடர் தொடரும்.....






Comments