அறிந்ததும் அறியாததும் பாகம் (11)........ பாடசாலை கிரிக்கெட்டில் அக்கறை கொண்ட புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு KSCஅங்கத்தவர்கள்......

 அறிந்ததும் அறியாததும் பாகம் (11)........

பாடசாலை கிரிக்கெட்டில் அக்கறை கொண்ட புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு KSCஅங்கத்தவர்கள்......



     மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும்  KSV யின்  பங்களிப்பு.....  

மட்டக்களப்பு நகரத்தில் இயங்கும் பாடசாலைகளுக்கு முதல் கட்டமாக கிரிக்கெட் உபகரணங்களை வழங்கி பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் இங்கிலாந்தில் இயங்கும் கிரிக்கெட் கழகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி குறிப்பாக இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரும் மூத்த உறுப்பினராக இராமநாதன் உதயராஜ் அவர்களின் பங்களிப்புடன் கிரிக்கெட் உபகரணங்களை சேகரித்து எமது நாட்டில் பாடசாலை கிரிக்கெட் விளையாட்டு வளம் பெற வேண்டும் என பல பல சிரமங்களின் மத்தியில் இங்கு அனுப்பி வைக்கின்றனர்.

 பாடசாலைகளின் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலை மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதால், இதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா அவர்கள் மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினரிடம் கோரிய போது உடனடியாக தாம் அனுப்புவதாக உறுதியளித்து 2019.05.04 அன்று கிரிக்கெட் உபகரணங்களை அனுப்பி வைத்திருந்தனர்.

இவ்வுபகரணங்களை கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாட்சரராஜா அவர்கள் நேரடியான பார்வையிட்டு அப்பொருட்களை கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் ஏ.சிவநாதன் அவர்களின் ஊடாக பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக கையளித்திருந்தார். இதிலிருந்து புரியவில்லையா கோட்டைமுனை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த உதவி வருவதை அறிய முடியவில்லையா? மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் தம் அன்றாட தொழிலும் ஈடுபட்டு பல கஸ்டங்களில் மத்தியில் எம்மவர் கிரிக்கெட் விளையாட்டில் மேம்பட வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது பல கஸ்டங்களின் மத்தியில் வாழும் எம் நல்லுள்ளங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இவ்வுதவிகளை பெற்று  உதவி வருகின்றது.

இது நாம் இன்று தெரிவிக்கும் கருத்தல்ல எல்லாம் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளே சற்று சிந்தியுங்கள் இது உங்களுக்கு அறிந்த விடயமோ? அறியாத விடயமோ? எமக்கு தெரியாது ஆனால் இன்று வரை கோட்டைமுனை விளையாட்டு கிராமமும், கோட்டைமுனை விளையாட்டு கழகமும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மற்றும் கழக மட்டத்திலான கிரிக்கெட் மேம்பாட்டிற்காக உழைத்த வருகின்றது.

அடுத்த தொடரில் சிவானந்தா பாடசாலைக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்ட்டதா? இன்னும் சம்பவங்கள் உண்டு  ......

தொடர் தொடரும்.....
















Comments