நானும் என் சமுர்த்தியும் 102ம் தொடர்.....

 நானும் என் சமுர்த்தியும் 102ஆம் தொடர்.....

2012ம் ஆண்டும் திவிநெகும (வாழ்வின் எழுச்சி) உற்பத்தி கண்காட்சி 2012.11.06ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடாத்தப்படும் இக்கண்காட்சியை   வழமை போன்று மாவட்ட செயலகத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவியுடன் நடாத்த இடம் தேர்வு செய்யப்பட்டது இம்முறை நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலகம் நடாத்தும் உற்பத்தி கண்காட்சி மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் P.S.M.சாள்ஸ் அவர்கள் கலந்து கொண்டு கண்காட்சியையும் விற்பனையையும் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் K.விமலநாதன் அவர்களும், சமுர்த்தி அதிகாரசபையின் வாழ்வாதார பிரிவின் பணிப்பாளர் M.நடேசராஜா அவர்களும், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் அவர்களும், மாவட்ட கணக்காளர் S.நேசராஜா அவர்களும், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் S.சிவநாதன் அவர்களும், மற்றும் பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி பிரிவால் நடாத்தப்பட்ட பாடசாலை மட்டத்திலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் பிரதேச செயலக மட்டத்தில் சிறந்த சேவையினை வழங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் கௌரவிக்கபப்ட்டனர். மற்றும் 2012ம் வருடம் சிறப்பாக செயற்பட்டதற்காக ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டது.

இதன் போது 14 பிரதேச செயலகங்களில் இருந்தும் வாழ்வின் எழுச்சியின் ஊடாக வாழ்வாதாரத்தின் உற்பத்திகள், விவசாய உற்பத்திகள், கைத்தொழில் உற்பத்திகள், கால்நடைகள், மீன்பிடி   உற்பத்திகள் காட்சிப்படுத்தபப்ட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.

 

இதே வேளை திவிநெகும திணைக்களம் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்று வந்தது. இதன் ஒரு கட்டமாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இது தொடர்பான செயலமர்வொன்று 15.11.2012 காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் S.H.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரட்னம் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ.குணரட்னம் அவர்களும், வலய முகாமையாளர்களான A.L.சுல்மி மற்றும் A..பரமலிங்கம், உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சங்கங்களின் தலைவர்கள், அதன் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடரும்......



















Comments