நானும் என் சமுர்த்தியும் -101ஆம் தொடர்........
கல்விச்சாதணையாளரை பாராட்டுவோம்.......
வருடந்தோறும் கல்விச்சாதனையாளர்களை பாராட்டி வந்த நான் 2012ம் ஆண்டும் 5ம் ஆண்டு புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணாக்கர்களையும், க.பொ.த(சா.த) பரீட்சையில் சித்தியடைந்தோர், பல்கலைகழகம் தெரிவானோரை கௌரவித்தோம் இவர்கள் அனைவரும் சமுர்த்தி பயனாளி குடும்பங்களில் இருந்தே தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செல்வன் இராமச்சந்திரன் தனுஸன் - 162
இராமச்சந்திரன் தயாநிதி தம்பதிகளின் ஏழுவது மகனான இவர், ஆண்டு ஒன்று தொடக்கம் இன்று வரை ஸ்ரீசக்தி வித்தியாலத்தில் கல்வி பயின்று இன்று இப்பாடசாலையின் 06 வருட இடை வெளிக்கு பின் 5ம் தர புலமை பரீட்சையின் சித்தியடைந்த இரண்டு மாணவர்களில் இவரும் ஒருவராக திகழ்கின்றார். தன் தந்தையாரின் மேசன் தொழில் மூலம் கிடைக்கும் பணத்தில் நாம் கல்வி கற்கின்றோம் என்ற உணர்வுடன் கல்வி கற்று சித்தியடைந்த இந்த மாணவரை கல்லடிவேலூர் சமுர்த்தி சமூகமே உணர்ச்சி பொங்க பாராட்டுகின்றது. தொடர்ச்சியாக முதலாம் மாணவராக வகுப்பில் வரும் இவரை இவ்வருடம் எப்படியும் சித்தியடைய வைக்க அயராது உழைத்த ஆசிரியர்கள், அதிபர், பெற்றோரையும் மனமார பாராட்டுகின்றோம். இவர் கல்லடி வேலூர் கிராம சமுர்த்தி பயனுகரியின் மகன் என கூறுவதில் இச்சமுர்த்தி ஒன்றியம் பெருமை பாராட்டுகின்றது. எனவே இந்த இளையோரை 2012ன் கல்விச்சாதணையாளர் என கௌரவிப்பதில் கல்லடிவேலூரின் 09 சமுர்த்தி சங்கங்களும் சமுர்த்தி ஒன்றியமும் பெருமையடைகின்றது
செல்வன் நடராஜா கிஷாளன் - 150
நடராஜா சரஸ்வதி தம்பதிகளின் மகனாக இவர் காஞ்சிரங்குடா கன்னங்குடாவை பிறப்பிடமாக கொண்டும் தற்போது நொச்சிமுனையை வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். ஆண்டு ஒன்று தொடக்கம் ஐந்து வரை மட்/ஸ்ரீசக்தி வித்தியாலத்தில் கல்வி பயின்று இன்று இப்பாடசாலைக்கும் தன் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், அதிபருக்கும் பெருமை சேர்த்து கொடுத்துள்ளார். தன் தந்தையாரின் மேசன் தொழில் மூலம் கிடைக்கும் பணத்தில் நாம் கல்வி கற்கின்றோம் என்ற உணர்வுடன் கல்வி கற்று சித்தியடைந்த இந்த மாணவனை கல்லடிவேலூர் சமுர்த்தி சமூகமே உணர்ச்சி பொங்க பாராட்டுகின்றது. எனவே இந்த இளையோரை 2012ன் கல்விச்சாதணையாளர் என கௌரவிப்பதில் கல்லடிவேலுரின் 09 சமுர்த்தி சங்கங்களும் சமுர்த்தி ஒன்றியமும் பெருமையடைகின்றது
2012 ம் ஆண்டு 5ம் தர புலமை பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற கல்வி சாதணையாளர்களை பாராட்டுவோம் .......
01 சி.சுஜீவன் 146 கன்னங்குடா மகா வித்தியாலயம்
02 தி.கேஜானி 145 கோட்டைமுணை கனிஸ்ட வித்தியாலயம்
03 சி. செறின் போல் 143 மெதடிஸ்த மத்திய கல்லூரி
04 ச. லதுஷன் 143 புனித மிக்கல் கல்லூரி
05 நா. ஷாருக்கான் 138 சிவானந்தா தேசிய பாடசாலை
06 உ. ஸதுர்ஷிகா 131 விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம்.
07 வை.புஸ்பாகரன் 123 ஸ்ரீசக்தி வித்தியாலயம்
08 த.லோஷன் 122 சிவானந்தா தேசிய பாடசாலை
09 உ.உதயலக்ஷன் 118 ஸ்ரீசக்தி வித்தியாலயம்
10 நா.ஜெயப்பிரகாஸ் 107 ஸ்ரீசக்தி வித்தியாலயம்
11 தி.தீட்சனா 106 ஸ்ரீசக்தி வித்தியாலயம்
12 வி. கிஷோனிதா 104 விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம்.
13 வி.திவ்யானி 102 ஸ்ரீசக்தி வித்தியாலயம்
2011 ம் ஆண்டு க.பொ.த (சாதாரண) தர பரீட்சையில் சித்தியடைந்த கல்விச்சாதணையாளர்களை பாராட்டுவோம்......
01.தனுஷனா ஜெயபாலன் 6A 2B 1C விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம்.
02.இராமச்சந்திரன் நிதர்ஷன் 1A 3B 3C 2S சிவானந்தா தேசிய பாடசாலை
03.கிரிஜா சிவகரன் 1A 3B 3C 2S விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம்.
04.யேசுகுமார் நிதுஷனன் 1A 2B 5C 1S சிவானந்தா தேசிய பாடசாலை
05.வைஸ்னவி சுரேந்திரராஜா 2A 5C 1S விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம்.
06.மகேந்திரராஜா கிருஷாந் 1A 1B 5C 2S விபுலானந்தா வித்தியாலயம்
கௌரவிப்பு -2012
கல்லடிவேலூர் சமுர்த்தி ஒன்றியம் 5ம் தர மாணவர்களுக்கான இரு நாள் விஷேட கருத்தரங்கு நடாத்திய போது கன்னங்குடா கிராமத்தில் இருந்து இங்கு வருகை தந்து கலந்து கொண்ட மூன்று மானவர்களில் இருவர் சித்தியும் ஒருவர் 100 மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றுக் கொண்டனர். எமது கிராமத்தில் இருந்து கொண்டு இக்கருத்தரங்கில் எமது மாணவர்கள் கலந்து கொள்ளாத போதும் இம்மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதை பாராட்டுவதுடன் அவர்களையும் கௌரவிக்க வேண்டிய கடமைப்பாடு கல்லடிவேலூர் சமுர்த்தி ஒன்றியத்திற்கு உண்டு எனவே எமது பணி எம் கிராமத்தை விட்டு வெளியில் முதல் தடவையாக செயற்படுவதை நாம் மனதார ஏற்று இம்மாணவர்களை கௌரவிப்பதில் பெருமையடைகின்றோம்.
செல்வி சுரேஸ்குமார் யுதிஸ்திகா – 154 (கன்னங்குடா மகா வித்தியாலயம்)
கன்னங்குடா மகாவித்தியாலத்தில் ஆண்டு ஒன்று தொடக்கம் கல்வி கற்று இம்முறை இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்த முதல் மாணவி தான் இவர். ஆயராத தன் முயற்சி மூலமும் ஆசிரியரின் அர்ப்பணிப்பான சேவையும், அதிபரின் அறிவுரையும், பெற்றோரின் ஊக்கமுமே இம்மாணவியை இன்று மிக உச்சத்தில் வைத்து நாம் பார்க்க முடிகின்றது. தனது தந்தையாரின் அயாத உழைப்பை உணர்ந்து சிந்தியடைந்திருக்கும் இம்மாணவி இனி வரும் காலங்களில் தான் சார்ந்த பாடசாலைக்கும் தன் பெற்றோருக்கும் பெருமை தேடி கல்வியில் முன்னேற்றமடைய கல்லடிவேலூர் சமுர்த்தி ஒன்றியம் வாழ்த்துவதுடன் பாராட்டையும் தெரிவிக்கின்றது.
செல்வி தங்கவடிவேல் கீதகி – 149 (கன்னங்குடா மகா வித்தியாலயம்)
கன்னங்குடா மகாவித்தியாலத்தில் ஆண்டு ஒன்று தொடக்கம் கல்வி கற்று இம்முறை இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்த இரண்டாவது மாணவி தான் இவர். ஆயராத தன் முயற்ச்சி மூலமும் ஆசிரியரின் அர்ப்பணிப்பான சேவையும், அதிபரின் அறிவுரையும், பெற்றோரின் ஊக்கமுமே இம்மாணவியை இன்று மிக உச்சத்தில் வைத்து நாம் பார்க்க முடிகின்றது. தனது தந்தையாரிள் அயாத உழைப்பை உணர்ந்து சிந்தியடைந்திருக்கும் இம்மாணவி இனி வரும் காலங்களில் தான் சார்ந்த பாடசாலைக்கும் தன் பெற்றோருக்கும் பெருமை தேடி கல்வியில் முன்னேற்றமடைய கல்லடிவேலூர் சமுர்த்தி ஒன்றியம் வாழ்த்துவதுடன் பாராட்டையும் தெரிவிக்கின்றது.
தொடரும்.......
Comments
Post a Comment