10.02.2022 தொடக்கம் மற்றுமொரு சமுர்த்தி உத்தியோகத்தருக்கு ஓய்வூதிய கொடுப்பணவு வழங்கப்பட்டுள்ளது......
10.02.2022 தொடக்கம் மற்றுமொரு சமுர்த்தி உத்தியோகத்தருக்கு ஓய்வூதிய கொடுப்பணவு வழங்கப்பட்டுள்ளது......
சமுர்த்தி அதிகார சபை சமுர்த்தி திணைக்களமாக மாற்றியமைக்கப்பட்டதன் பின்னர் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஓய்வூதிய திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டனர். தற்போது ஓய்வு பெற்றுச் சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பணவு வழங்கும் செயற்பாடு நாடுபூராவும் துரித கதியில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது சமுர்த்தி உத்தியோகத்தருக்கு 10.02.2022 அன்று முதல் ஓய்வூதிய கொடுப்பணவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி.சிவசக்தி சிவபாலன் அவர்களுக்கு 10.02.2022 முதல் ஓய்வூதிய கொடுப்பணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 1997.01.08ஆம் திகதி தன் முதல் நியமனத்தை சமுர்த்தி ஊக்குவிப்பாளராக பெற்றுக் கொண்ட இவர் 2020.10.29 அன்று தம் பணியை முடித்துக் கொண்டு ஓய்வூதிய நிலைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவருடன் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் ஓய்வூதிய நிலைக்கு சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விரைவாக ஓய்வூதிய கொடுப்பணவு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment