நானும் என் சமுர்த்தியும் -100ம் தொடர்
கல்லடி வேலூரின் 2012ம் ஆண்டிற்கான முதியோர் தின நிகழ்வும், கல்விச்சாதனையாளர் கௌரவிப்பை மிகச்சிறப்பாக நடாத்தினேன். இதில் மிக முக்கியமாக 5ம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், 2011ம் ஆண்டு க.பொ.த (சாதாரண) தர பரீட்சையில் சித்தியடைந்தேரையும் கௌரவித்ததோடு. கல்லடி வேலூர் கிராமத்தில் அயாராது மக்களுக்காக உழைத்த திரு கிருஸ்ணப்பிள்ளை சிவபாலன் அவர்களை மக்களின் அன்பில் கௌரவித்தேன்.
வாழும் போதே வாழ்த்துவோம் .......
திருமதி பொன்னுத்துரை செல்லமணி (1929.02.02)
சம்மாந்துறை வீரமுனையை பிறப்பிடமாக கொண்ட இவர் 1929.02.02ம் திகதி சரவணமுத்து மாணிக்கம் தம்பதியர்களுக்கு மகளாக பிறந்தார். இவர் கல்லடிவேலூரை தற்போது நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் தனது கல்வியை மட்/சிசிலியா பெண்கள் பாடசாலையில் 2ம் வகுப்பு வரை கல்வி கற்றுள்ளார். இவர் கல்லடி தெருவை சேர்ந்த சரவணமுத்து பொன்னுத்துரையை 1950ம் ஆண்டு கரம்பற்றி இவருக்கு 07 பிள்ளைகளில் தற்போது 4பேர் மாத்திரமே உள்ளனர். இவர் 12 பேரப்பிள்ளைகளையும், 13 பூட்டப்பிள்ளைகளையும் கண்டு தன் இனிதான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார் இவரின் கணவர் தச்சுத் தொழிலை தன் வாழ்வாதார தொழிலாக கொண்டு நடத்தி வந்தார். இவரின் கணவர் இவரை விட்டு 1978ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் கடந்த காலங்களை பற்றி கூறும் போது 1950 ஆண்டில் சின்ன உப்போடையில் வசித்து வந்த போது 1957ம் ஆண்டு பெரும் வெள்ளம் மட்டக்களப்பில் வந்த போது அப்போது காடாக இருந்த கல்லடிவேலூரில் கால் ஏக்கர் ஒரு குடும்பத்திற்கு என கொடுத்து குடியேற்றியதாகவும், தாங்கள் காடுகளை வெட்டி தான் இங்கு குடில்கள் அமைத்ததாகவும் குறிப்பிடும் இவர் கூடுதலானோர் இங்கு வாழ பயப்பட்டதாகவும், இன்று இக்கிராமத்தில் மக்கள் கூடுதலாக வாழ்வதாக சந்தேஷமாக தன் பழைய நினைவுகளை மீட்டினார். இன்று தனது முதிய காலத்தில் சுகமான உடல் ஆரோக்கியத்துடன் பேத்தியுடன் வாழ்ந்து வரும் இவரை 2012ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் என வாழும் போது இவரை கௌரவப்படுத்துவதில் துர்க்கா சமுர்த்தி சங்கம் பெருமையடைகின்றது. எனவே இவரை கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்
திருமதி கதிரமலை இராசம்மா (1931.05.13)
இவர் 1931.05.13ம் திகதி சின்னத்தம்பி குஞ்சுப்பிள்ளை தம்பதியர்களுக்கு மகளாக பிறந்தார். இவர் கல்லடிவேலூரை தற்போது நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் கதிரமலையை 1952ல் கரம்பற்றி இவருக்கு 06 ஆண் பிள்ளைகளும் 05 பெண் பிள்ளை என 11 பிள்ளைகள் பிறந்த போதும் தற்போது 05 பிள்ளைகள் மத்திரமே உள்ளனர். இவர் 23 பேரப்பிள்ளைகளையும் 08 பூட்டப்பிள்ளைகளையும் கண்டு தன் இனிதான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இவர் தனது கல்வியை மட்/கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலையில் 2ம் வகுப்பு வரைகல்வி கற்றுள்ளார் இவரின் கணவர் மேசன் தொழிலை தன் வாழ்வாதார தொழிலாக கொண்டு நடத்திவருகின்றார் எனவே இவரை 2012ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் என வாழும் போது இவரை கௌரவப்படுத்துவதில் சக்தி சமுர்த்தி சங்கம் பெருமையடைகின்றது. எனவே இவரை கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.
திருமதி சின்னத்தம்பி அருளம்மா (1939.07.16)
கல்லடியை பிறப்பிடமாக கொண்ட இவர் 1939.07.16ம் திகதி திருமதி இளையதம்பி தம்பதியர்களுக்கு மகளாக பிறந்தார். இவர் கல்லடிவேலூரை தற்போது நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் சின்னத்தம்பியை 1955ம் ஆண்டு கரம்பற்றினார். இவருக்கு 02 ஆண் பிள்ளைகளும் 04 பெண் பிள்ளையும் உண்டு. மற்றும் 08 பேரப்பிள்ளைகளை கண்டு தன் இனிதான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார் இவர் தனது கல்வியை 6ம் வகுப்புடன் முடித்துக் கொண்டார். இவரின் கணவர் 2007ம் ஆண்டில் இவரை விட்டுப்பிரிந்தார்.தன் குடும்ப வாழ்க்கையை கொண்டு நடத்த இடியப்பம் செய்யும் தொழிலை அன்று தொடங்கியவர் இன்று வரை செய்து வருவது குறிப்பிடத்தக்கதும் வியப்பிற்குறிய விடயமுமாகும். எனவே தற்போது தன் முதிய காலத்தில் திருமணமாகாத தன் இளைய மகளுடன் தன் வாழ்க்கையை நடத்தி வரும் இவரை 2012ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் என வாழும் போது இவரை கௌரவப்படுத்துவதில் காயத்திரி சமுர்த்தி சங்கம் பெருமையடைகின்றது. எனவே இவரை கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.
திருமதி திருநாவுக்கரசு வள்ளியம்மை
கிரானை பிறப்பிடமாக கொண்ட இவர் சின்னமணி அன்னப்பிள்ளை தம்பதியர்களுக்கு 07ஆண்பிள்ளைகளுக்கு ஒரே ஒரு மகளாக பிறந்தார். இவர் கல்லடிவேலூரை தற்போது நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் கல்லடியை பிறப்பிடமாக கொண்ட திருநாவுக்கரசை 1957ம் ஆண்டு கரம்பற்றி இவருக்கு 08 ஆண் பிள்ளைகளும் 03 பெண் பிள்ளைகளும் என 11 பிள்ளகைள் உண்டு. இவர் 08 பேரப்பிள்ளைகளையும், 07 பூட்டப்பிள்ளைகளையும் கண்டு தன் இனிதான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார் இவரின் கணவர் 2006ம் ஆண்டில் இவரை விட்டுப்பிரிந்தார். இதன் பின்தன் சொந்த வாழ்க்கையை கொண்டு நடத்த இன்று கச்சான் பொதி செய்து விற்பனை செய்து தனிமையில் சமைத்து தனி வீட்டில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்க வியப்பிற்குறிய ஒரு விடயமாகும் சுயகௌரவத்துடன் வாழும் இவரை 2012ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் என வாழும் போது கௌரவப்படுத்துவதில் அலைமகள் சமுர்த்தி சங்கம் பெருமையடைகின்றது. எனவே இவரை கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.
திருமதி சின்னத்தம்பி சின்னப்புள்ள (1934.11.12)
கல்லடி உப்போடையை பிறப்பிடமாக கொண்ட இவர் 1934.11.12ம் திகதி சின்னத்தம்பி அன்னமுத்து தம்பதியர்களுக்கு மகளாக பிறந்தார். இவர் கல்லடிவேலூரை தற்போது நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் தன் கல்வியை மட்/விவேகானந்தா மகளிர் வித்தியாலத்தில் 6ம் வகுப்பு வரை கற்றுள்ளார். இவர் கல்லாற்றை சேர்ந்த மூத்ததம்பி சின்னத்தம்பியை கரம்பற்றி இவருக்கு 08 பிள்ளைகள் கிடைத்தன இதில் தற்போது 03 ஆண்பிள்ளையும் 03 பெண் பிள்ளைகளும் தான் வாழ்கின்றார்கள் இவருக்கு 08 பேரப்பிள்ளைகளையும், 08பூட்டப்பிள்ளைகளையும் கண்டு தன் இனிதான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார் இவரின் கணவர் 1994ம் ஆண்டில் இவரை விட்டுப்பிரிந்தார். எனவே இவரை 2012ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் என வாழும் போது கௌரவப்படுத்துவதில் அபஹாமியா சமுர்த்தி சங்கம் பெருமையடைகின்றது. எனவே இவரை கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்.
திருமதி மகேசன் செல்லத்தங்கம் (1936.12.05)
கல்லடி உப்போடையை பிறப்பிடமாக கொண்ட இவர் 1936.12.05ம் திகதி கந்தப்பர் வள்ளியம்மை தம்பதியர்களுக்கு மகளாக பிறந்தார். இவர் கல்லடிவேலூரை தற்போத நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் கல்லடி தெருவை சேர்ந்த மாணிக்கம் பாக்கியம் தம்பதிகளின் மகனான மாணிக்கன் மகேசனை கரம்பற்றி இவருக்கு 04 ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உண்டு. மற்றும் 12 பேரப்பிள்ளைகளை கண்டு தன் இனிதான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார் இவர் தனது கல்வியை மட்/கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலையில் 6ம் வகுப்ப வரைகல்வி கற்றுள்ளார் இவரின் கணவர் மீன் பிடி தொழிலை தன் வாழ்வாதார தொழிலாக கொண்டு நடத்திவர இவரும் சிற்றூண்டி செய்து தன் வாழ்க்கையை கொண்டு நடத்தி வந்தார். தற்போது தன் முதிய காலத்தில் இளைய மகளுடன் தன் வாழ்க்கையை நடத்தி வரும் இவரை 2012ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் என வாழும் போது இவரை கௌரவப்படுத்துவதில் லட்சுமி சமுர்த்தி சங்கம் பெருமையடைகின்றது. எனவே இவரை கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்
திருமதி கனகம்மா கந்தையா (1932.09.11)
கல்லடி உப்போடையை பிறப்பிடமாக கொண்ட இவர் 1932.09.11ம் திகதி இளையதம்பி தெய்வானை தம்பதியர்களுக்கு 7வது மகளாக பிறந்தார். இவர் கல்லடிவேலூரை தற்போது நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் தம்பிலுவில்லை சேர்ந்த வேதவனம் வள்ளியம்மை தம்பதிகளின் மகனான வேதவனம் கந்தையாவை 1948ம் ஆண்டு கரம்பற்றி இவருக்கு 04 ஆண் பிள்ளைகளும் 04 பெண் பிள்ளையும் உண்டு. மற்றும் 36 பேரப்பிள்ளைகளையும் 30 பூட்டப்பிள்ளைகளையும் கண்டு தன் இனிதான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார் தற்போது தன் முதிய காலத்தை மகனுடன் இன்பமாக வாழ்ந்த வருகின்றார். இவரை 2012ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் என வாழும் போது இவரை கௌரவப்படுத்துவதில் கலைமகள் சமுர்த்தி சங்கம் பெருமையடைகின்றது. எனவே இவரை கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்
திருமதி வேலுப்பிள்ளை மகேஸ்வரி (1946.10.12)
முனைக்காட்டை பிறப்பிடமாக கொண்ட இவர் 1946.10.12ம் திகதி நல்லையா இராசம்மா தம்பதியர்களுக்கு மகளாக பிறந்தார். இவர் கல்லடிவேலூரை தற்போது நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் நடேசன் வேலுப்பிள்ளை என்பவரை 1961ம் ஆண்டு கரம்பற்றி இவருக்கு ஒரு ஆண் பிள்ளைகளும் 02 பெண் பிள்ளையும் உண்டு. மற்றும் 08 பேரப்பிள்ளைகளையும் 08 பூட்டப்பிள்ளைகளையும் கண்டு தன் இனிதான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார் 4ம் வகுப்புவரை படித்த இவர் 1994ல் தன்கணவரை இழந்த பிறகு சமையல் தொழிலில் தேர்ச்சி பெற்ற இவர் அத்தொழிலை செய்து வந்தார். தற்போது தன் முதிய காலத்தை மகளுடன் இன்பமாக வாழ்ந்த வருகின்றார். இவரை 2012ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் என வாழும் போது இவரை கௌரவப்படுத்துவதில் மலைமகள் சமுர்த்தி சங்கம் பெருமையடைகின்றது. எனவே இவரை கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்
திருமதி தம்பிரராஜா தங்கரெட்ணம் (1930.09.16)
இவர் 1946.10.12ம் திகதி சபாபதி சின்னப்பிள்ளை தம்பதியர்களுக்கு கடைசி மகளாக பிறந்தார். இவர் கல்லடிவேலூரை தற்போது நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் இளையதம்பி தம்பிராஜா என்பவரை 1947ம் ஆண்டு கரம்பற்றி இவருக்கு 08 ஆண் பிள்ளைகளும் 05 பெண் பிள்ளையும் என 13 பிள்ளைகள் உண்டு. மற்றும் 37 பேரப்பிள்ளைகளையும் 46 பூட்டப்பிள்ளைகளையும் 08 கொள்ளு பேரப்பிள்ளைகளையும் கண்டு தன் இனிதான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இவர் 1971ல் தன்கணவரை இழந்தார் அதன் பின் தன் மூத்த மகனின் உதவியுடன் சகல பிள்ளைகளையும் திருமணம் முடித்து வைத்துவைத்துள்ளார். தற்போது கச்சான் பக்கட் பொதி செய்து தன் சுயமுயற்சியுடன் வாழ்ந்து வரும் இவரை 2012ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் என வாழும் போது இவரை கௌரவப்படுத்துவதில் சரஸ்வதி சமுர்த்தி சங்கம் பெருமையடைகின்றது. எனவே இவரை கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியமும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்
திரு கிருஸ்ணப்பிள்ளை சிவபாலன்
இவர் கிருஸ்ணப்பிள்ளை செல்லத்தங்கம் தம்பதியர்களுக்கு இரண்டாவது மகனாக நொச்சிமுனையில் பிறந்தார். தமது ஆரம்ப கல்வியை கல்லடி உப்போடை இராமகிருஸ்ண மிசன் பாடசாலையிலும், ஆரையம்பதி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் கற்றார். பின்பு மட்/சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலை காலத்தில் கதை, கட்டுரை, நாடகத்திற்கான சிறப்பு பரிசில்களை பெற்றுள்ளார். 1967ல் இந்திய திருச்சிரா பள்ளியினுடாக B.A டிக்கிரி கிடைத்ததுடன், மனித வள முகாமைத்துவம் பற்றி அறியக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது. 1971ல் நீர்ப்பாசன இலாகாவில் பணி புரிந்து 1984ல் மட்/மாநகரசபையில் வேலைப்பகுதி மேற்பார்வையாளராக கடமையாற்றி 2002ம் ஆண்டு ஓய்வு பெற்றார். சமூக சேவையில் இவருக்கான நாட்டம் சிறுவயது முதலே இருந்ததால் ஓய்வுக்கு பின் கல்லடிவேலூரில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக செயற்பட்டு பல வீதிகள், கிணறு, மலசலகூடங்கள் கட்டவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு வழங்கியுள்ளார். அத்துடன் கல்லடிவேலூர் கிராமத்தில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தையும், முதியோர் சங்கத்தையும் உருவாக்கிய பெருமை இவரையே சாரும் எனலாம். தற்போது நிரந்தர வசிப்பிடமாக கல்லடிவேலூரை கொண்டு வசித்து வரும் இவர் மண்முனை வடக்கு பிரதேச செயலக முதியோர் அபிவிருத்தி ஒன்றியத்தின் செயலாளராக கடமையாற்றுவதுடன் இனக்க சபையின் ஒரு முக்கிய உறுப்பினராகவும், பல்சமய ஒன்றியத்தின் உறுப்பினராகவும், சமாதான நீதவானாகவும், கல்லடிவேலூர் முதியோர் சங்க தலைவராதகவும் கிராமத்திற்குரிய அரிய சேவைகள் செய்வது மாத்திரமன்றி ஸ்ரீபஞ்சநாக காயத்திரி அம்மன் ஊடாக சமய பணிகளையும் செய்து தன் ஆன்மீக வாழ்விலும் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு ஒரு ஆண் மகனும் 03 பெண் பிள்ளைகளும் உண்டு.சமூக பணியிலும், ஆன்மீக பணியிலும்தன்னை முழுமையாக அர்பணித்த இவரை 2012ம் ஆண்டின் சிறந்த முதியோர் என வாழும் போதே பாராட்டுவதில் கல்லடிவேலூரின் 09 சமுர்த்தி சங்கங்களும் சமுர்த்தி ஒன்றியமும் பெருமையடைகின்றது.
இந்த 100 தொடரில் முதியோர் கௌரவிப்பை பார்த்துள்ளோம் அடுத்த தொடரில் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பை பார்ப்போம். இந்த 100வது தொடரை எத்தனை பேர் சந்தேசமாக பார்த்தீர்களோ? திட்டி தீர்த்தீர்களோ? எனக்கு தெரியாது. ஆனால் சிலர் சந்தித்து தொடர்ந்து எழுத தூண்டியதை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். அன்மையில் மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் I.அலியார் அவர்களின் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை என்னை ஆழமாக பதிந்தது நாம் இன்றும் நல்லா இருக்க சமுர்த்தி உதவியுள்ளது என்று அவர் கூறும் போது நான் என்னுள்ளேயே கைகளை தட்டிக் கொண்டேன் நன்றி சேர்....
தொடரும்....
Comments
Post a Comment