அறிந்ததும் அறியாததும் பாகம் (10)........ சிவானந்தா பாடசாலையின் மைதானம் புனரமைக்கப்படாமல் தடைப்பட்டது ஏன்?......
அறிந்ததும் அறியாததும் பாகம் (10)........
சிவானந்தா பாடசாலையின் மைதானம் புனரமைக்கப்படாமல் தடைப்பட்டது ஏன்?......
மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும் KSV யின் பங்களிப்பு.....
முதற்கட்ட பணிகளை தொடங்குவதற்காக மைதானத்தை கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் மேற்பார்வை பொறியியலாளர் திரு.மதனன் அவர்கள் 2019.03.02ம் திகதி அன்று சிவானந்தா மைதானத்தை பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற் கொண்டார். இதன் போது சிவானந்தா பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் S.ரவீந்திரன் அவர்களும் கலந்து கொண்டு மைதானத்தின் நிலைமைகளை பற்றி கலந்துரையாடினார்.
மைதானத்தின் ஆடுகளம் (Pitch) புனரமைப்பதாக இருந்தால் இரு மாத காலத்திற்கு ஆடுகளத்தை பாவிக்க முடியாது. மற்றும் மைதானத்தை ஒரு மாத காலத்திற்கு எந்த விளையாட்டுக்களும் விளையாட முடியாது எனவே இதனைக்கருத்தில் கொண்டு தமக்கான அனுமதியை தந்து உதவுமாறு கோட்டைமுனை விளையாட்டு கிராமம் சிவானந்தா பாடசாலையிடம் கோரி இருந்தது.
இதற்கான அனுமதியை தாம் கூடிய விரைவில் பழைய மாணவர் சங்கத்துடனும், பாடசாலை நிர்வாகத்தினருடனும், சிவானந்தா விளையாட்டு கழகத்தினருடனும் கலந்துரையாடி பெற்றுத்தருவதாகவும் தற்போது சில நிகழ்வுகள் நடாத்துவதற்காக மைதானம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அன்று தெரிவித்தனர்.
ஆனால் இது தொடர்பாக அவர்கள் பிற்காலத்தில் எந்த ஒரு உறுதிப்பாட்டையும் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திடமோ, கோட்டைமுனை விளையாட்டு கழகத்திடமோ தெரிவிக்கவில்லை இதனால் சிவானந்தா ஆடுகளம் புனரமைக்கும் பணி தடைப்பட்டு போனது. இது சிலருக்கு தெரிந்த விடயமாகுவும், பலருக்கு தெரியாத விடயமாகுவும் இருந்திருக்கும். இம்மைதானம் 2019ல் புனரமைக்கப்பட்டிருந்தால் இன்று ஒரு சிறந்த கிரிக்கெட் மைதானமாக இருந்திருக்கும்.
அடுத்த தொடரில் பாடசாலைகான உதவி வழங்கப்பட்டதா என பார்ப்போம்.....
தொடர் தொடரும்.....
Comments
Post a Comment