அறிந்ததும் அறியாததும் பாகம் (09)........ சிவானந்தா பாடசாலையின் கிரிக்கெட் மேம்பாட்டிற்கான ஒரு கலந்துரையாடல்.....

 அறிந்ததும் அறியாததும் பாகம் (09)........

சிவானந்தா பாடசாலையின் கிரிக்கெட் மேம்பாட்டிற்கான ஒரு கலந்துரையாடல்.....



     மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும்  KSV யின்  பங்களிப்பு.....  

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கும் சிவானந்தா பாடசாலைக்கும் இடையிலான  ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றது.

மட்டகளப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதுடன் தேசிய மட்டத்தித்திற்கு வீரர்களை கொண்டு சேர்க்கும் நோக்குடன் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மட்டகளப்பில் உள்ள பாடசாலைகளின் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன் பல உதவிகளை செய்து வருகின்றது. இதன் முதல் கட்டமாக புனித மிக்கல் கல்லூரிக்கு அன்மையில் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கி இருந்தது. அதன் இரண்டாம் கட்டமாக மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலைக்கும் உதவி செய்யும் நோக்குடன்  பாடசாலையின் அதிபர் திரு.யசோதரன் அவர்களுடன் 2016.02.19 அன்று   கலந்துரையாடப்பட்டது. இதன்போது சிவானந்தா  பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவர் திரு.மங்களேஸ்வரன் அவர்களும், செயலாளர் S.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் முன்னாள் மட்டக்களப்பு கல்விப்பணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர்  E.சிவநாதன் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகளான S.ரஞ்சன் அவர்களும்S.காசிப்பிள்ளை அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் P.சடாற்சரராஜா அவர்களும், மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அங்கத்தவர்கள்  என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த அங்கத்தவரும் இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் புவசிங்கம் வசீகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

  இதன் போது கருத்து தெரிவித்த கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் அவர்கள் ஏற்கவே இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட கிரிக்கெட் உபகரணங்கள் தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டதாகவும், இம்முறை வரவுள்ள பொருட்களில் தங்களுக்கான உதவி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார். 

 இதன் போது சிவாந்தா மைதானத்தை புரனமைத்து தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

 இவ்விடயம் பலருக்கு அறிந்தும் சிலருக்கு அறியாமலும் இருந்திருக்கும். சிவானந்தா பாடசாலைக்கு உதவிகள் வழங்கப்பட்டதா? சிவானந்தா மைதானம் புனரமைக்கப்பட்டதா என அடுத்த தொடரில் பார்ப்போம்....

 தொடர் தொடரும்.....







Comments