One Stop Shop சமுர்த்தி வேலைத்திட்டம் பற்றி விழிப்பூட்டல் கருத்தரங்கு ....
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி One Stop Shop வேலைத்திட்டம் பற்றி விழிப்பூட்டல் கருத்தரங்கு 31.01.2022 அன்று மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இவ் ஒரு நாள் விழிப்பூட்டல் கருத்தரங்கினை மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் I.அலியார் அவர்கள் கருத்துரை வழங்கி நெறிப்படுத்தி செல்கின்றார். இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 31 சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், 14 பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச்சங்கத்தின் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இக்கருத்தரங்கானது 2022ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக சமுர்த்தி வங்கி நடவடிக்கைகளில் புதிய மாற்றங்களையும், புதிய நடைமுறைகளையும் தெளிவூட்டும் விழிப்புனர்வு கருத்தரங்காகவே நடைபெற்று வருகின்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொள்பவர்கள் இதை கிராம மட்டத்தில் கொண்டு சென்று விழிப்பூட்ட வேண்டும் இச் செயற்பாடு 31.03.2022 முன்னர் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் J.Fமனோகிதராஜ் அவர்களும், மாவட்ட சிரேஸ்ட கருத்திட்ட முகாமையாளர் A.M.அலி அக்பர் அவர்களும், மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும், கணக்காய்வு உத்தியோகத்தர் E.முரளிதரன் அவர்களும், மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும், வங்கி கண்காணிப்பு உத்தியோகத்தர் N.விஸ்வலிங்கம் அவர்களும், மாவட்ட சமுர்த்தி சமுர்த்தி முகாமையாளரும புலனாய்வு உத்தியோகத்தர் S.தயாகரன் அவர்களும், மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment