வெள்ளிவிழா காணும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்......
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களில் பொரும்பாலானோர் 2022.01.07ம் திகதி அன்று தாம் சமுர்த்தி திட்டத்தில் உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்பட்டு 25வது வருடம் (வெள்ளிவிழா) கடந்து செல்வதை இன்று நான் நினைவு கூறுகின்றேன்.
1997.01.07ம் திகதி அன்று மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் வைத்து ஒரு கிராமத்திற்கு இரண்டு சமுர்த்தி ஊக்குவிப்பாளர் எனும் நியமனம் வழங்கப்பட்டு மாதாந்தம் இப்பணிக்கான கொடுப்பணவாக 2000/- ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தோம். இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பெரும்பாலான இளைஞர் யுவதிகளுக்கு புதிய சமுர்த்தி ஊக்குவிப்பாளர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. பின்னர் 1999ம் ஆண்டு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு ஒவ்வொரு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வாழ்விலும் பல மாற்றங்களுடன் இன்று 25 வருடத்தை கடந்து செல்கின்றது. இதில் இணைந்த சில சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஓய்வூதியம் பெற்று சென்தும், இன்னும் சில சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நம்மை விட்டு பிரிந்தும் சென்றுள்ளனர். எனவே பல இன்னல்களை கண்டும் இன்னும் துவழாமல் வாழும் எம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் எம்மை விட்டு பிரிந்த அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்குமாக பிரார்த்திப் போமாக.
Comments
Post a Comment