கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வீடு கையளிப்பு......

 கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வீடு கையளிப்பு......



சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்த்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவில் காகித நகர் கிராமத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளியான அபூபக்கர் றாபாய்தீன் அவர்களுக்கான 2021ம் ஆண்டுகான  ஆறு லட்சம் சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் வீட்டு பணிகள் முடிவடைந்து கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் V.தவராஜா  அவர்களினால்  கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் M. பாஸ்கரன் அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் M.L.சியாத் அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் M.N.M.சாஜஹான் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான M.S.சுபைர், J.இம்தியாஸ் அவர்களும் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இவ் வீட்டுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ரூபா 600,000 நிதி வழங்கப்பட்டதுடன் மீதியான தொகையினை பிரதேசத்தில் உள்ள சமூக நலன் விரும்பிகளும் பயனாளியும் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.








Comments